தமிழக ரயில் நிலைய பெயர்ப் பலகைகளில் முன்னிலைப்படுத்தப்படும் இந்தி.. ஓரம்கட்டப்பட்ட தமிழ், ஆங்கிலம்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பழைய பெயர்ப் பலகையில், அந்தந்த ரயில் நிலையத்தின் ஆங்கிலப் பெயர் பிரதானப்படுத்தப்பட்டிருந்த நிலையில், புதிய பெயர்ப் பலகையில் இந்து வார்த்தை பிரதானப்படுத்தப்பட்டுள்ளது விவாதமாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிகளை மாணவர்கள் கற்கும் வகையில் மத்திய அரசு வடிவமைத்தது. இதனை தமிழக அரசு இதுநாள் வரை ஏற்கவில்லை. இதனால் தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய சுமார் ரூ.2,400 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது.

லோக் ஆயுக் சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கோரிக்கை வைத்த போதும், அந்த நிதி விடுவிக்கப்படவில்லை. இதனிடையே 4 நாட்களுக்கு பின் மொழிப் போர் தியாகிகளுக்கான நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போதும் முதல்வர் ஸ்டாலின் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், மும்மொழிக் கொள்கையை ஏற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
அதேபோல் மொழிப்போர் தியாகிகள் தொடர்பாகவும், இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாகவும், இந்தி திணிப்புக்கு பின் உள்ள அரசியல் தொடர்பாகவும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. அதெபோல் மத்திய அரசு மறைமுகமாக இந்தியை திணிக்க முயல்வதாகவும் விமர்சனங்கள் எழுந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பெயர்ப் பலகையில் ஒரு மாற்றம் நடந்து வருகிறது. தற்போது சென்னையில் உள்ள ரயில் நிலையங்களின் பழைய பெயர்ப் பலகைகள் மாற்றம் செய்யப்பட்டது. இதன்பின் புதிய பெயர்ப் பலகைகளில் ஒரு மாற்றத்தை செய்து ரயில்வே துறை வைத்து வருகிறது. அதாவது பழைய பெயர்ப் பலகைகளில் ஆங்கிலப் பெயர் பிரதானப்படுத்தி இருந்தது.
அதாவது மேலே தமிழும், அதன்பின் நடுவில் ஆங்கிலமும், கீழே இந்தியிலும் பெயர்ப் பலகைகள் இருக்கும். ஆனால் புதிய பெயர்ப் பலகையில் மேலே தமிழும், நடுவில் இந்தியும், கீழே ஆங்கிலமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசு இந்தியை முன்னிலைப்படுத்தி பெயர்ப் பலகைகளை அமைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது மக்களிடையே விவாதமாகி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications