3ம் வகுப்பு படிக்கிற.. இந்தியில் கவிதை சொல்லத் தெரியாதா.. சென்னையில் மாணவனை அடித்த ஆசிரியை!
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் பள்ளியில் இந்தி கவிதை சொல்லாததால் 3ஆம் வகுப்பு மாணவரை கடுமையாக தாக்கிய இந்தி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவரை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று மிரட்டிய அந்த ஆசிரியை ஆத்திரத்துடன் தாக்கிய நிலையில், மாணவரின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இந்தி ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை விடுவிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே பாஜக தரப்பில் 3வது மொழி அவசியம், கும்மிடிப்பூண்டி தாண்டினால் இந்தி தேவைப்படும், மற்ற மாநிலங்களில் சாப்பாடு சாப்பிட இந்தி தேவைப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அரசியல் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுக் கொடுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்பு குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய மாணவரை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதனால் அந்த மாணவரின் பெற்றோர் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியை மீதும் புகார் அளித்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் பவன் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பத்மலட்சுமி என்பவர் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் 3வது வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு இந்தி கற்பதிலும், படிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்திருக்கின்றன.
இந்த சூழலில் 3வது வகுப்பு மாணவரை இந்தியில் கவிதை சொல்லுமாறு பத்மலட்சுமி கூறி இருக்கிறார். அப்போது அந்த மாணவர் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய போது, அந்த ஆசிரியை மாணவரை கடுமையாக அடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பள்ளிக்குள் விடமாட்டேன் என்றும் மிரட்டி தொடர்ந்து அடித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த மாணவரின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக இந்தி ஆசிரியை மீது பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தி ஆசிரியை பத்மலட்சுமி சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்த சம்பவம் மக்களிடையே விவாதமாகியுள்ளது.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications