சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழமையான கோயில்களுக்காக சிறப்பு திட்டம்.. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோயில்களை முழுமையாக ஆவணப்படுத்தி பாதுகாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ஆவணம் தயாரிக்கும் திட்டப்பணிகளுக்கு நிதியுதவி வழங்க அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

நிதி வசதியில்லாத கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி தொகையினை நிதிவசதிமிக்க கோயில்களில் இருந்து துறையின் விதிகளுக்குட்பட்டு உரிய வழியில் விடுவித்துக்கொள்ளலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபபபாட்டில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் நூற்றாண்டு பழமையான 3300 கோயில்கள் அடக்கம். இக்கோயில்களுக்கு போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதனால் ப கோயில்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

டீசல் விலையை குறைக்காவிட்டால் லாரி ஸ்டிரைக் : தென்னிந்திய லாரி உரிமையாளர் நலச்சங்கம் அறிவிப்பு டீசல் விலையை குறைக்காவிட்டால் லாரி ஸ்டிரைக் : தென்னிந்திய லாரி உரிமையாளர் நலச்சங்கம் அறிவிப்பு

கோயில்கள் பாதுகாப்பு

கோயில்கள் பாதுகாப்பு

இந்நிலையில் கோயில்களை முழுமையாக ஆவணப்படுத்தி பாதுகாக்கும் சிறப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. நிதிவசதி மிக்க கோயில்களில் இருந்து ஆவணம் தயாரிக்கும் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு:

நிதி வசதி

நிதி வசதி

"மிகவும் சிதிலமடைந்த பழமையான கோயில்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பு திட்டம் தயாரிக்கும் பணிக்கு நிதி வசதியில்லாத கோயில்களுக்கு ஆணையர் பொதுநல நிதியில் இருந்து வழங்க வேண்டி சார்நிலை அலுவலர்களால் முன்மொழிவு சமர்பிக்கப்பட்டு வருகிறது.

அரசு அனுமதி

அரசு அனுமதி

தொன்மையான சிதிலமடைந்த கோயில்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் திட்டப் பணிக்கு காலதாமதம் ஏற்படுவதாலும், அக்கோயில்களின் நிலை மேலும் பாதிக்கக்கூடும் என்பதாலும், அதை தவிர்க்கும் பொருட்டு தங்களது சரகத்திற்கு உட்பட்ட நிதிவசதிமிக்க கோயில்களில் இருந்து நிதிவசதியில்லாத கோயில்களில் இப்பணியை மேற்கொள்ள நிதியுதவி வழங்க இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

நிதி வசதி உள்ள கோயில்கள்

நிதி வசதி உள்ள கோயில்கள்

இப்பணிக்காக நிதி வசதியில்லாத கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி தொகையினை நிதிவசதிமிக்க கோயில்களில் இருந்து துறையின் விதிகளுக்குட்பட்டு உரிய வழியில் விடுவித்து பின்னர் ஆணையருக்கு முன்மொழிவு சமர்ப்பித்து ஆணையர் பொதுநல நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
In Tamil Nadu, a project is to be carried out to fully document and preserve the ancient temples under the control of hindu religious and charitable endowments department . Commissioner of Hindu Religious Affairs Kumaraguruparan has given permission to provide financial assistance for document preparation projects for this purpose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X