என்னது பெரியாரா? போன் அவரோடது.. டோன் கிறிஸ்தவ மிஷினரியோடதாம்! ஜோசப் விஜய்.. தவெகவைச் சீண்டும் இமக..!
சென்னை: எங்கு பார்த்தாலும் தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாடும், அதன் தலைவர் விஜய் குறித்த பேச்சாகத் தான் இருக்கிறது. இந்த நிலையில் விஜய் தானாக பேசவில்லை கிறிஸ்தவ மிஷனரிகள் எழுதிக் கொடுத்த பேச்சைப் பேசியிருக்கிறார் என விமர்சித்து இருக்கிறது இந்து மக்கள் கட்சி.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் நடந்தேறி இருக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 2 மணி நேரம் மட்டுமே மாநாட்டு நிகழ்வுகள் நடந்தாலும் அதிகாலையில் இருந்தே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்தனர். அவர்களுக்கு முறையாக குடிநீர், உணவு உள்ளிட்டவை வழங்கப்படாததால் பலர் மயக்கம் அடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநாட்டு திடலுக்கு வந்த விஜய் தனது கொள்கை தலைவர்களாக பெரியார், காமராசர், வேலுநாச்சியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோரை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் பெரியாரின் கடவுள் மறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பகுத்தறிவு பெண்கள் முன்னேற்றம் சமூக நீதி ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார். இது பல விமர்சங்களை பெற்றுள்ளது. பகுத்தறிவுக் கொள்கையில் முதலாவது கடவுள் மறுப்பு எனும் பெரியாரிய ஆதரவாளர்கள் விஜய் குழப்ப மனநிலையில் இருப்பதாக விமர்சிக்கின்றனர்.
அதே நேரத்தில் திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், விஜய் தானாக பேசவில்லை கிறிஸ்தவ மிஷனரிகள் எழுதிக் கொடுத்த பேச்சைப் பேசியிருக்கிறார் என விமர்சித்து இருக்கிறது இந்து மக்கள் கட்சி. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ஆன்ந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நேற்று தமிழக வெற்றி கழகம் நடிகர் தலைவர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பேசியது முழுக்க முழுக்க லயோலா கல்லூரி ஸ்கிரிப்ட் கிருஸ்தவ மிஷனரி பயிற்சிப் பட்டறை என்று நினைக்கிறேன்.
அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா ? என்று பேசி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கொண்டு வர போகிறோம் என்பதை மறைமுகமாக சொல்லி கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று பேசி திராவிட மாடல் அரசை சும்மா மிரட்டியிருக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் அதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே வேளையில் திருடன் கையில் சாவியை கொடுக்க முடியாது. திராவிட மாடல் யாரையும் விலை பேசும். மய்யம் அடிமையானது போல நாளை என்ன வேண்டுமானாலும் ஆகலாம் தவெக. இனி தவெக கட்சி தலைவர் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மாற்று சித்தாந்தம் கொண்ட அரசியல் கட்சி கருத்துகளை முக்கியமாக ஊடக நண்பர்களின் கேள்விகளுக்கு, குறிப்பாக தமிழக மக்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை இந்த அரசியலை எதிர்க் கொள்ள வேண்டும் ஒடி ஒழிய கூடாது ஒடி ஒழிய முடியாது,
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை தொட்டு இருப்பது, வீர மங்கை வேலு நாச்சியார் அவர்களை தொட்டு இருப்பது, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி
அஞ்சலை அம்மாள் அவர்களை மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களை தொட்டு இருப்பது எல்லாம் பார்க்கும் போது கொள்கையில் நிறைய முரண்பாடுகள் கொண்டதாக உள்ளது. குறிப்பாக ஈவெராவை தொட்டு இருப்பது எல்லாம் பார்க்கும் போது இவரது அரசியல் பயண பாதை போக போக தான் தெரிய வரும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் பொருத்து இருந்து பார்ப்போம்” என கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications