Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடராஜர் குறித்து அவதூறாக பேசினாரா மைனர்? சிக்கலில் சிக்கிய யூ2 புருட்டஸ்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்து மத கடவுளான நடராஜரை சமூகவலைதளத்தில் அசிங்கமாக பேசிய u 2 Brutus புகார் எழுந்துள்ள நிலையில், அந்த யூட்யூப் சேனலை முடக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

Recommended Video

    இந்து மத கடவுள் குறித்து ஆபாச விமர்சனம்: யூடியூப் சேனல் மீது இந்து மக்கள் கட்சியினர் போலீசில் புகார்!

    சமூக வலைதளமான யூட்யூபில் U2 Brutus என்ற சேனலை நடத்தி வருபவர் மைனர் விஜய். இவர் இந்து மதம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்துக்களின் முதன்மையான தெய்வமான நடராஜ சிவபெருமான் காலை ஏன் தூக்கி வைத்திருக்கிறார் என வீடியோ ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார்.

    நடராஜர் குறித்து அவதூறு

    நடராஜர் குறித்து அவதூறு

    அந்த வீடியோவில் நடராஜர் குறித்து அவதூறாகவும், அவரது நடன அசைவுகள் குறித்து மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் கேவலமாக சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் காணொளி அவரது சேனலில் ஒளிபரப்பு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

    சர்ச்சை வீடியோ

    சர்ச்சை வீடியோ


    அந்த காணொளி பலதரப்பட்ட இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி இந்து மதத்தைச் சார்ந்த பல்வேறு கட்சியினர் காவல்துறையிடம் சம்பந்தப்பட்ட நபர் மீது புகார்களை கொடுத்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில் வசிக்கும் இந்து மக்கள் கட்சியின் சென்னை மாநகர தலைவர் கண்ணன் அவர்கள் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.

    பரபரப்பு புகார்

    பரபரப்பு புகார்

    இந்து மத கடவுளான நடராஜரை சமூகவலைதளத்தில் அசிங்கமாக பேசிய utu Brutus யூட்யூப் சேனலை முடக்க வலியுறுத்தியும், அதற்கு காரணமான மைனர் விஜயை கைது செய்ய கோரியும் வலியுறுத்தியுள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட ஆதம்பாக்கம் காவல்துறையினர் புகாரின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி புகாரை பெற்றுக் கொண்டதற்கான சான்று வழங்கினர்.

    யூட்யூப் பிரபலம்

    யூட்யூப் பிரபலம்

    கடந்த சில நாட்களாக இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி சிலர் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். கந்தசஷ்டி கவசம், முருகன், சிவபெருமானை தொடர்ந்து தற்பொழுது நடராஜரை இழிவுபடுத்தி கேவலமாக யூ டூ புரூட்டஸ் என்ற யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்டுள்ளனர் என ஏற்கனவே இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+