டிஎன்பிஎஸ்சி குரூப் 4ல் வெடித்த சர்ச்சை! இயேசு பற்றி வந்த அந்த 2 கேள்வி! யார் அப்செட்டுன்னு பாருங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கிறிஸ்துவ மதம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக பல்வேறு இந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன.

சமீபத்தில்தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள்.

tnpsc group 4 exam tnpsc jobs job tamil nadu 4

இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.

முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. அரசு வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன . மொத்தமாக 5,990 பணியிடங்கள் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது.

குரூப் 4: இந்த நிலையில் கடந்த வாரம் தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.

குற்றச்சாட்டு; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கிறிஸ்துவ மதம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக பல்வேறு இந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன.

அதன்படி கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என்ற கேள்வி உள்ளது?

1.அருளப்பன்

2. யோவான்

3. சந்தாசாகிப்

4. சந்நியாசி

5. விடை தெரியவில்லை.

இந்த கேள்வி முதல் பக்கத்திலேயே வந்துள்ளதாக இந்து அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. முக்கியமாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

அடுத்த கேள்வியிலேயே தேம்பாவணியின் பாட்டுடை தலைவன் யார் என்று கேட்டு அதில் இயேசு, மரியாள், மற்றும் யூதாஸ் பெயர்கள் பதிலுக்கான ஆப்ஷனாக கொடுக்கப்பட்டு உள்ளது. கிறிஸ்துவம் தொடர்பான இந்த கேள்விக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+