காதர்பேட்டை சுந்தரத்தை தூக்கிய போலீஸ்..இந்துக்கள் என்றால் இளக்காரமா? என்கிறார் காடே சுப்பிரமணியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : இஸ்லாம் மதத்தை விமர்சித்ததாக இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்களை கைது செய்யும் காவல்துறை, இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சம் காட்டுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.

திருப்பூரில் பிரபல வணிக பகுதியான காதர் பேட்டை பகுதியில் கடந்த தட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனிதராக கருதப்படும் முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

kadeswara subramaniam hindu munnani police

இதனையடுத்து இரு சமுதாயத்தினரிடையே பிரிவினையை தூண்டும் வகையில், செயல்பட்ட சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. தொடர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அவர்களிடம் காவல் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த நிலையில் இஸ்லாம் மதத்தினர் மனம் புண்படும் வகையில் பேசியதாக காதர் பேட்டை சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இஸ்லாமியர்கள் குறித்து விமர்சித்தால் ஹிந்துக்களை மட்டும் கைது செய்யும் காவல்துறை இந்துக்களை விமர்சிப்பவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் இந்து முன்னணி மாநில தலைவரான காடேஸ்வரா சுப்பிரமணி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திருப்பூர் காதர் பேட்டை வியாபாரி சுந்தரம் என்பவர் இஸ்லாம் மதத்தை பற்றிய விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என்பதாக குற்றம் சாட்டி வழக்கு போட்டு கைது செய்துள்ளது தமிழக காவல் துறை. கடந்த 3 ஆண்டுகளில் இதுபோன்ற எத்தனை கைது நடவடிக்கைகளை காவல்துறை எடுத்துள்ளது என்பதை பட்டியலிட முடியும்.

அதே சமயம் இந்து கடவுளை, இந்து சமயத்தை, இந்து சமுதாய மக்களை, நமது நாட்டை, சுதந்திரத்தை கேவலப்படுத்தி நமது சுதந்திர போராட்ட வீரர்களை இழிவுபடுத்தி பொது இடத்தில் பேசியவர்கள் மீதும், முகநூலில் பதிவிட்டவர்கள் மீதும் இதே காவல் துறையிடம் பல புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன்முறை ஏற்படும் என்பதால் நடவடிக்கை இல்லை என இந்துக்கள் புரிந்து கொண்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்ன ஆகும்? தமிழக அரசின் பாரபட்சம் இதில் அப்பட்டமாக தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் காவல் துறையை ஏவல் துறையாக ஆளும் கட்சி பயன்படுத்தி காவல் துறையின் மூளையை கெடுத்து அடிமைகளாக நடத்தி வருகிறது என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.

அதன் காரணமாக தமிழகத்தில் போதைப் பொருள், வங்கதேசத்தினர் ஊடுருவல், நக்சல், இஸ்லாமிய பயங்கர வாதம் மீண்டும் பகிரங்கமாக தலை தூக்கி வருகிறது. தமிழக முதல்வர் தனது கட்டுப்பாட்டில் அரசு இயந்திரத்தை வைத்து நிர்வகிக்கிறாரா என்ற கேள்வி மக்களிடம் இயல்பாகவே எழுகிறது. எனவே தமிழக அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதையும், இந்துக்களை மட்டும் கைது செய்து வழக்கு போட்டு மிரட்டும் பாசிச போக்கையும் கைவிட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+