'அம்மா’ என்றால் அன்பு.. அன்னையர் தினம் கொண்டாடப்படுவதன் வரலாறு தெரியுமா? இந்த 2 பெண்கள் தான் காரணம்!
சென்னை: அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தின கொண்டாட்டம் தொடங்கியது எப்படி தெரியுமா? அன்னையர் தினம் கொண்டாடப்படுவதன் பின்னணியில் அமெரிக்காவை சேர்ந்த 2 பெண்கள் உள்ளனர்.
ஆண்டுதோறும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டப்படுகிறது. அதன்படி மே 12ஆம் தேதியான இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள் அன்னையரின் தியாக வாழ்க்கையை நினைவுகூரும் தினமாக மட்டும் இன்றி, தாய்மையின் தன்னலமற்ற தியாகத்திற்கு மதிப்பு கொடுப்பதை வலியுறுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

தாய்மார்களின் நிபந்தனையற்ற அன்பையும் தன்னலமற்ற தியாகங்களையும் மனதார அங்கீகரிப்பதே அன்னையர் தினத்தின் முக்கியத்துவம். குடும்பத்தை வடிவமைத்து, குழந்தைகளை அன்புடனும், அக்கறையுடனும் வளர்க்கும் தாய்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்தும் நாள் இன்று.
பதினாறாம் நூற்றாண்டு பிரிட்டனில் 'மதரிங் சண்டே' கொண்டாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நாளில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் பகுதியில் உள்ள பிரதான தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். அங்கு குழந்தைகள் தங்களுடன் பூக்கள் மற்றும் சிறிய பரிசுகளைக் கொண்டு வந்து அவற்றை தாய்மார்களுக்கு கொடுப்பது வழக்கம்.
தற்போது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் அன்னையர் தினத்தின் தொடக்கம் எப்படி தோன்றியது தெரியுமா? அன்னையர் தின கொண்டாட்டத்தில் இரண்டு அமெரிக்க பெண்களுக்கு பெரிய பங்கு உள்ளது. அவர்கள் ஜூலியா வார்ட் ஹோவ் மற்றும் அன்னா ஜார்விஸ்.
அன்னையர் தினம் தோன்றுவதற்கு 1872ஆம் ஆண்டு ஆலோசனை வழங்கியர் ஜூலியா வார்டு ஹோ. இவர் ஒரு சமூக ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர் ஆவார். அமெரிக்காவில் நடந்த உள்நாட்டு போரின் நினைவாக நாட்டில் அமைதி வேண்டி, ஜூன் மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டாலும், அதன் பின்னர் அன்னையர் தினம் தொடர்பான குரல்கள் தீவிரமடைந்தன. அன்னா ஜார்விஸின் தீவிர முயற்சியால் தான் உலகம் முழுவதும் தற்போது சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1908ஆம் ஆண்டு தனது தாய் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் காலமான போது, அன்னா ஜார்விஸ் ஏற்பாடு செய்த ஒரு நினைவுச் சேவையுடன் அன்னையர் தினத்திற்கான வரலாறு தொடங்கியது.
அன்னா ஜார்விஸ், அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அர்ப்பணிப்புள்ள சமூக சேவகியாகவும் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு உதவி செய்பவராகவும் பிரபலமானவர். தனது தாயின் சேவைகளால் ஈர்க்கப்பட்டு, தனது தாயின் பணிகளைப் போன்றே அனைத்து தாய்மார்களையும் கௌரவிக்க வேண்டும் என்ற விருப்பத்தால், அன்னையர் தினத்தை அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை நாளாக நிறுவுவதற்கான பரப்புரையை அன்னா ஜார்விஸ் மேற்கொண்டார்.
அதன் விளைவாக 1914 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுகிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என பிரகடனம் செய்தார். தாய்மார்களை கௌரவிக்கும் அந்த நாளை தேசிய விடுமுறையாகவும் அறிவித்தார். அதன்படியே தற்போது மே 2ஆம் ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய நாளில், அன்னையர் தினத்தை பெயரளவில் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், வாழ்நாளெல்லாம் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் உழைத்துத் தேயும் நம் அன்னையரை பெருமைப்படுத்தும், அவர்களை மனதார மகிழ்ச்சிப்படுத்தும் நாளாகக் கொண்டாடுவோம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications