பிறந்தது வளமான குடும்பத்தில்! படித்தது அமெரிக்காவில்! பிடித்தது அரசியல்! இது ப.சிதம்பரத்தின் கதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

1984-ம் ஆண்டு சிவகங்கை தொகுதியிலிருந்து முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான ப.சிதம்பரம், காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அதிகாரம் படைத்த மனிதராக வலம் வந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தால் ப.சிதம்பரம் தான் பிரதமராக கூட வந்திருப்பார். காரணம் அன்று அவரது பெயர் பிரதமர் பதவிக்கு பரிசீலனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்கோட்டை நகரத்தார்

நாட்டுக்கோட்டை நகரத்தார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செல்வ செழிப்புமிக்க நாட்டுக்கோட்டை நகரத்தார் குடும்பத்தில் பிறந்தவர் ப.சிதம்பரம். பணத்திற்கு எந்த பஞ்சமும் இல்லாமல் வளர்க்கப்பட்ட ப.சிதம்பரம், தந்தை பழனியப்பனை போலவோ, அவரது தாத்தா அண்ணாமலையை போலவோ வியாபாரத்தில் நாட்டம் காட்டவில்லை. அதற்கு மாறாக சட்டம் பயின்று வழக்கறிஞராக வர வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கேற்ப அவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு பயின்ற அவர் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை படித்தார்.

பெரியார் வாழ்த்தினார்

பெரியார் வாழ்த்தினார்

பின்னர் இந்தியா திரும்பிய அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். அப்போது தன்னுடன் சக வழக்கறிஞராக பணியாற்றிய நளினியை காதலித்து கரம் பிடித்தார். இந்த திருமணம் ஒரு கலப்பு திருமணம் என்பதால் அந்தக் காலகட்டத்தில் இதை ஆதரித்து பேசி வந்த பெரியார், ப.சிதம்பரத்தின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தினார். வழக்கறிஞர் பணியோடு ப.சிதம்பரத்தின் ஆசை தீரவில்லை. அரசியலில் கோலோச்ச வேண்டும் என விரும்பிய அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்றினார்.

சிவகங்கை தொகுதி

சிவகங்கை தொகுதி

1984-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்திராகாந்தியின் படுகொலைக்கு பிறகு பிரதமராக வந்த ராஜீவ்காந்தி, அமைச்சரவையில் சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு தனது வயது ஒத்த தமது கட்டளையை ஏற்று செயல்படக் கூடியவர்களை மந்திரிகளாக்கினார். அந்த வகையில் ப.சிதம்பரத்திற்கு 1985-ம் ஆண்டு ஜாக்பாட் அடித்தது. ராஜீவ்காந்தி அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சரானார்.

1987 ஆம் ஆண்டு

1987 ஆம் ஆண்டு

பின்னர் 1987-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு இணை அமைச்சராக்கப்பட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட ப.சிதம்பரம் தனது திறமையான செயல்பாடுகளால் காங்கிரஸில் மெல்ல வளரத் தொடங்கினார். நரசிம்மராவ் ஆட்சியிலும் மத்திய அமைச்சர் பதவி ப.சிதம்பரத்தை தேடி வந்தது. அதன் பிறகு காங்கிரஸில் இருந்து விலகி ஜி.கே.மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார்.

தமாகா வேட்பாளர்

தமாகா வேட்பாளர்

தமாகா வேட்பாளராக 1996-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வென்ற ப.சிதம்பரம், தேவகவுடா தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சர் ஆனார். மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், கடந்த 1997-ம் ஆண்டு கொண்டு வந்த வரிச் சீர்த்திருத்தம் அரசியலில் கடும் புயலை கிளப்பியது. ஆனாலும் அசராத ப.சிதம்பரம் வரி ஏய்ப்பை தடுக்கவேண்டுமானால் தாம் கொண்டு வந்த வரிச் சீர்த்திருத்தம் அவசியமானது எனக் கூறி அதில் சாதிக்கவும் செய்தார்.

2004-ம் ஆண்டு

2004-ம் ஆண்டு

மத்தியில் 1998-ம் ஆண்டு முதல் பாஜக ஆண்ட போது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் தன்னை மேல் நிலை தலைவராக உருவாக்கிக் கொண்டார். 2004-ம் ஆண்டு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது மத்திய நிதி அமைச்சர் பதவி ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக அப்போதைய உள்துறை அமைச்சர் ஷிப்ராஜ் பாட்டீல் பதவியை ராஜினாமா செய்தார்.

 உள்துறை அமைச்சர்

உள்துறை அமைச்சர்

இதையடுத்து அமைச்சரவையிலேயே மிகவும் பவர்ஃபுல் துறை என்றழைக்கப்படும் உள்துறை ப.சிதம்பரம் வசம் ஒப்படைக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது வெற்றிச் செல்லாது எனக் கோரி இன்றைய தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் நீதிமன்றத்தை நாடினார். இப்படி பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் மீண்டும் மத்தியில் உள்துறை அமைச்சர் பொறுப்பு ப.சிதம்பரத்திற்கே கொடுக்கப்பட்டது.

 நக்சல் ஒழிப்பு

நக்சல் ஒழிப்பு

மத்திய உள்துறை அமைச்சராக இருந்தக் காலத்தில் நக்சல் ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தினார் ப.சிதம்பரம். 2 ஜி பிரளயத்தின் போது சிபிஐ அமைப்பை தன் வசம் வைத்திருந்த ப.சிதம்பரத்தால் 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்தது. இதையடுத்து திமுகவும் காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டது. அந்த வகையில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் தோல்வியை தழுவினார். ஆனால் நாடாளுமன்றத்திற்கு இவரது தேவையை உணர்ந்த காங்கிரஸ் தலைமை மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 2016-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்தது.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

இப்போது அவரது பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் அவருக்கு தமிழகத்தில் ராஜ்யசபா சீட் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. ப.சிதம்பரம் மீது ராகுலுக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து அவர் எழுப்பும் குரலே அவருக்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+