திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.. 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திருவண்ணாமலை: கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இன்று சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது அருணாசலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வழக்கமாக விடுமுறை நாட்கள் மற்றும் பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்தவகையில், கிறிஸ்துமஸ் நாளான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது திருவண்ணாமலையில் மார்கழி மாத மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் முதல் நாளில் மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று விடுமுறை நாளையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட் டம் அலைமோதியது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்களால் நெரிசல் அதிகம் காணப்பட்டது. வாகன நெரிசலும் கடுமையாக இருந்தது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications