சொந்த வீடு கட்டறீங்களா? வீட்டுக்கடன் வாங்க போறீங்களா? அப்ப இந்த ஆவணங்கள் முக்கியம்.. மறந்துடாதீங்க
சென்னை: எஸ்பிஐ-யில் வீட்டுக்கடனை பெற தகுதிகள் என்னென்ன தெரியுமா? வீட்டுக்கடனை விண்ணப்பிக்க வேண்டுமானால், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது.. அவ்வப்போது இந்த திட்டங்களில், சிறப்பு சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது.
பொதுமுடக்கம்: அதிலும், கொரோனா காலத்தில் எஸ்பிஐ வங்கியின் சேவை அளப்பரியது. வேலைவாய்ப்பின்றி, பொதுமுடக்கத்தில் அவதிப்பட்டபோது, சிறப்பு சலுகை ஒன்றை எஸ்பிஐ அறிவித்திருந்தது. ஏதாவது அவசர காரணத்துக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், வீட்டிலிருந்தபடியே 45 நிமிடங்களுக்குள் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்றும், 6 மாதத்துக்கு மாத தவணை கட்ட வேண்டியதில்லை என்றும் அப்போது அறிவித்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்க்க வைத்திருந்தது.

அந்தவகையில், பாரத ஸ்டேட் வங்கி அதன் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தொடர்ந்து கடன்களை வழங்கி வருகிறது... இதில், வீட்டுக்கடன்களை பொறுத்தவரை, வீட்டுக்கடன்கள், என்ஆர்ஐ வீட்டுக் கடன்கள், ஃப்ளெக்ஸிபே வீட்டுக் கடன்கள், ஷௌர்யா வீட்டுக் கடன்கள், ரியல்டி வீட்டுக்கடன்கள் போன்ற பல விருப்பங்களை வழங்குகிறது.
வீட்டுக்கடன்: வீட்டுக்கடன்களுக்கான வட்டிகள் எல்லாமே குறைந்த வட்டி விகிதங்களாகும்.. அபராதமும் கிடையாது.. தினசரி குறைக்கும் இருப்புக்கான வட்டிக் கட்டணம், 30 வருடங்கள் வரை திருப்பி செலுத்தும் காலம் இப்படி நிறைய அம்சங்கள் உள்ளன.. முக்கியமாக, வீட்டுக்கடனுக்கான விண்ணப்பிக்கும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக வட்டி விகிதத்தில் கூடுதலான தள்ளுபடிகளையும் அறிவித்து வருகிறது..
இந்த வீட்டுக்கடனை பெற வேண்டுமானால் அதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் தெரியுமா? அதற்குரிய ஆவணங்கள் என்னென்ன தேவைப்படும் தெரியுமா?
தகுதிகள்: வீட்டுக் கடனை வாங்க வேண்டுமானால், விண்ணப்பதாரர் 18 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்... 3 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் இருக்க வேண்டும்.
அடையாள அட்டை, (பான் கார்டு / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் அடையாள அட்டை) விற்பனை பத்திரம் உள்ளிட்ட சொத்து ஆவணங்கள், பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்ப படிவம், அடையாளம், வருமான சான்றிதழ், குடியிருப்புக்கான சான்று (இவைகளில் ஏதேனும் ஒன்று: தொலைபேசி பில் நகல், மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், குழாய் எரிவாயு பில் அல்லது பாஸ்போர்ட் நகல், ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டை), போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்...
எப்படி விண்ணப்பிப்பது: ஒருவேளை ஏதேனும் கூடுதல் ஆவணத்தை கேட்க நேர்ந்தால், அதனையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்பிஐ வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் அல்லது வங்கியின் அதிகாரபூர்வ வெப்சைட்களில் விண்ணப்பிக்கலாம்.
இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ இன்னொரு சிறப்பு அதிரடியை வெளியிட்டிருந்தது.. அந்தவகையில், எஸ்பிஐ வீட்டுக்கடனுடன் சேர்த்து சோலார் திட்டத்தையும் இணைத்து புதிய கடன் திட்டத்தை அறிவித்திருக்கிறது..
புதிய திட்டம்: அதாவது, வரும் காலங்களில் கட்டிடம் கட்டுபவர்கள், தங்கள் கூரையில் சோலார் பொருத்துவதை கட்டாயமாக்க எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளதாம்.. வீட்டுக் கடன் விண்ணப்பதாரர்களுக்கு இது கட்டாயமாக்கப்படலாம். இந்த கடன் 10 முதல் 20 வருடங்கள் வரை இருக்கும் என்கிறார்கள்.. இந்த திட்டம் மட்டும் செயல்வடிவம் பெற்றால், வீடுகளின் கூரையில் சோலார் யூனிட்களை நிறுவும் திட்டங்களுக்கு மட்டுமே, எஸ்பிஐ வங்கி கடன்களை அனுமதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications