கனிமொழிக்கு அமித்ஷா கொடுத்த சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் சிஐடி காலனி! பின்னணி என்ன?
சென்னை: திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறியிருப்பது சி.ஐ.டி.காலனி தரப்பை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.
அமித்ஷாவிடம் இருந்து வந்த அழைப்பின் மூலம், திமுகவின் டெல்லி முகம் கனிமொழி தான் என அவரது ஆதரவாளர்கள் கூறத்தொடங்கியுள்ளனர்.
அண்மையில் டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற திமுக எம்.பி.க்கள் குழுவை சந்திக்க மறுத்த அமித்ஷா, இன்று கனிமொழியிடம் மட்டும் பேசியிருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

கனிமொழி வரவேற்பு
ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வரும் நிலையில், அவரை வரவேற்கும் விதமாக 2 நாட்களுக்கு முன்னர் கனிமொழி கூறிய கருத்து டெல்லியை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மாநிலத்துக்கு வரும் பிரதமர் மோடியை எதிர்க்க தேவையில்லை என கனிமொழி அளித்த பேட்டி மத்திய அமைச்சர் அமித்ஷா கவனத்திற்கும் சென்றிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கனிமொழி வரவேற்பு
ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வரும் நிலையில், அவரை வரவேற்கும் விதமாக 2 நாட்களுக்கு முன்னர் கனிமொழி கூறிய கருத்து டெல்லியை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மாநிலத்துக்கு வரும் பிரதமர் மோடியை எதிர்க்க தேவையில்லை என கனிமொழி அளித்த பேட்டி மத்திய அமைச்சர் அமித்ஷா கவனத்திற்கும் சென்றிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

அரசியல் அர்த்தம்
மேலும், டி.ஆர். பாலு அளவுக்கு கனிமொழி நாடாளுமன்றத்தில் கடுமை காட்டமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் அண்மையில் டி,ஆர்.பாலுவை சந்திக்க நேரம் தர மறுத்த அமித்ஷா, இன்று கனிமொழியை அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதனிடையே கனிமொழிக்கு அமித்ஷா வாழ்த்துக் கூறிய பின்னணியில் பல்வேறு அரசியல் அர்த்தங்கள் பொதிந்துள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அழைப்பு நிராகரிப்பு
கடந்த 29-ம் தேதி டி.ஆர்.பாலு எம்.பியின் தொலைபேசி அழைப்பை ஏற்ற அமித்ஷா உதவியாளர், நான் சொல்கிறேன், அப்போது வாங்க என்பதோடு இணைப்பை துண்டித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பலமுறை டி.ஆர்.பாலு தரப்பில் இருந்து குறுஞ்செய்தி, அழைப்பு சென்றும் எதற்கும் பதில் அளிக்காமல் நிராகரிப்பட்டது கவனிக்கத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications