ஓரினச்சேர்க்கையில் தகராறு.. ஐடி ஊழியரை கொன்று தற்கொலை செய்த நண்பன்.. சென்னையில் பயங்கரம்
சென்னை: சென்னையில் வீட்டை விட்டு மாயமான இரு இளைஞர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் ஓரினச்சேர்க்கை பிரச்சினையில் நண்பனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மற்றொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வது அதிகரித்து உள்ளது. பெரிய பெரிய நகரங்களிலும் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' என்ற பெயரில் இளம் ஜோடிகள் இத்தகைய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

அதேபோல் சிலர் இயற்கைக்கு மாறாக ஓரினச்சேர்க்கை உறவில் இருக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் இத்தகை உறவுகளில் ஏற்படும் பிரச்சனை என்பது உயிரை கூட பறிக்கிறது. சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தான் தற்போது சென்னையில் திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
அதாவது ஓரினச்சேர்க்கை என்பது 2 இளைஞர்களின் உயிரை பறித்துள்ளது. அதாவது ஓரினச்சேர்க்கையாளர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நண்பனை கொன்ற இளைஞர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வருமாறு:
சென்னை அமைந்தகரை சேர்ந்தவர் 25 வயது நிரம்பிய லோகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 8 ம் தேதி வேலைக்கு சென்ற லோகேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. செல்போனுக்கு போன் செய்தால் ‛ஸ்விட்ச்ஆப்' என வந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் லோகேசை ஆங்காங்கே தேடிப்பார்த்தனர். நண்பர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் லோகேஷ் வீட்டுக்கும் திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பயந்துப்போய் அமைந்தகரை போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் லோகேசின் போட்டோவை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி அவரை தேட தொடங்கினர்.
இதற்கிடையே சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயது நிரம்பிய வாஞ்சிநாதன் என்பவர் தனது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் செய்திருந்தார். அதில், ‛‛நான் தற்கொலை செய்யப்போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்'' என தெரிவித்து இருந்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி உடனடியாக அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அப்போது தனது சகோதரர் வாஞ்சிநாதன் சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அவன் எதற்காக தற்கொலை செய்து கொள்வதாக அனுப்பியது தெரியவில்லை. மேலும் அவன் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியவில்லை. அவனை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து அம்பத்தூர் போலீசார் வாஞ்சிநாதன் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி அவரது செல்போன் முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள விடுதி அறையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த விடுதிக்கு போலீசார் சென்றனர். அப்போது வாஞ்சிநாதன் தங்கிய அறை பூட்டப்பட்டு இருந்தது. இைதயடுத்து மாற்று சாவி உதவியுடன் போலீசார் அந்த அறையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு வாஞ்சிநாதன் தூக்கில் பிணமாக தொங்கினர். மேலும் அவரது அறையில் இன்னொருவரும் இறந்து கிடந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் அது அமைந்தகரையை சேர்ந்த மாயமான ஐடி ஊழியர் லோகேஷ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி நொலம்பூர் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது லோகேசை கொன்று வாஞ்சிநாதன் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து இருவருக்கும் இடையே என் தொடர்பு என்பது பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த விசாரணையில் தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது லோகேஷ், வாஞ்சிநாதன் ஆகியோர் நண்பர்கள் என்பது தெரியவந்தது. மேலும் இப்போது தனித்தனி ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வந்தாலும் கூட முன்பு அவர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்துள்ளனர். அப்போது இருவரும் நெருங்கி பழங்கி உள்ளனர். ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு அவர்கள் நிறுவனங்கள் மாறியும் தொடர்ந்து நண்பர்களாக இருந்து அடிக்கடி சந்தித்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் இருவரும் விடுதியில் அறை எடுத்து தங்கியபோது திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் லோகேஷ் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்னளர்.












Click it and Unblock the Notifications