Honeymoon Murder: தேனிலவு கொலை 2.0: காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் போட்ட பகீர் ஐடியா! சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்
ஜெய்பூர்: மேகாலயாவில் கணவரை ஹனிமூனுக்கு (Honeymoon Murder 2.0)அழைத்து சென்று இளம்பெண் கொன்ற சம்பவத்தை மிஞ்சும் வகையில் ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அஞ்சு என்ற திருமணம் ஆகி 3 மாதமே ஆன இளம்பெண் தன் காதலன் அஞ்சுவுடன் சேர்ந்து கணவரை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு விபத்து, கொள்ளை நாடகம் ஆடிய சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.
சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவத்தில் கணவரை கொன்ற இளம்பெண் மற்றும் அவரது காதலன், அவரது நண்பர்கள் இருவர் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆஷிஷ் - அஞ்சு ஜோடி
ராஜஸ்தான் ஸ்ரீகங்காநகர் பகுதியை சேர்ந்தவர் ஆஷிஷ். இவருக்கு கடந்த 3 மாதங்களுகு முன்பு 21 வயது இளம்பெண் அஞ்சு என்பவருடன் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி ஆஷிஷ் - அஞ்சு இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆஷிஷ் தினமும் இரவு டின்னர் சாப்பிட்டுவிட்டு சிறிது தூரம் நடைப்பயிற்சி செல்லும் வழக்கம் உண்டு. கடந்த மாதம் 30 ஆம் தேதி இரவு அவரது மனைவி அஞ்சுவும் உடன் சென்றார். இருவரும் நடைப்பயிற்சி சென்றனர். இந்த நிலையில் அப்பகுதி காவல்துறையினருக்கு இரவு 9 மணியளவில் போன் வந்தது. அதில் விபத்தில் தம்பதி ஒருவர் சாலையில் அடிபட்டு கிடப்பதாக கூறப்பட்டது.
போலீசாருக்கு எழுந்த சந்தேகம்
இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்க்கும் போது ஆஷிஷ் - அஞ்சு ஜோடி காயங்களுடன் கிடந்தனர். இதில் இளைஞர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால் அஞ்சு லேசான காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு அஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது எங்களிடம் இருந்த தங்க நகைகளை பறிப்பதற்காக யாரோ வாகனத்தை எங்கள் மீது மோதிவிட்டு நகைகளை பறித்துவிட்டு சென்றனர் என்றார். ஆனால் போலீசாருக்கு அஞ்சு கூறியது மீது நம்பிக்கை இல்லை. மேலும் கார் மோதியது போல் ஆஷிஷ் உடலில் காயங்கள் இல்லை. யாரோ கழுத்தை நெரித்து கொன்றிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
தேனிலவு 2.0 சம்பவம்
இதனால் அஞ்சுவிடம் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது மேகாலயாவில் கணவரை ஹனிமூனுக்கு அழைத்து சென்று இளம்பெண் கொன்ற சம்பவத்தை போன்றே அஞ்சுவும் காதலன் சஞ்சுவுடன் சேர்ந்து திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருந்தது தெரியவந்தது.
அஞ்சுவுக்கு ஆஷிசுடன் நடந்த திருமணத்தில் விருப்பமில்லை. அவர் ஏற்கனவே சஞ்சு என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர் ஆஷிசுக்கு அஞ்சுவை திருமணம் செய்து வைத்துவிட்டனர். ஒன்றாக கணவன் மனைவி ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் முன்னாள் காதலனை அஞ்சுவால் மறக்க முடியவில்லை.
காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு
ஒரு நாள் தன் அம்மா வீட்டிற்கு அஞ்சு சென்ற போது முன்னாள் காதலன் சஞ்சு கண்ணில் பட்டு இருக்கிறார். இதனால் மீண்டும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். செல்போனிலும் தொடர்ந்து பேசி வந்து இருக்கிறார்கள். இதனால் காதலுக்கு குறுக்கே இருந்த கணவரை தீர்த்துக்கட்ட அஞ்சு முடிவு செய்துள்ளார்.

கணவர் தினமும் இரவு நடைப்பயிற்சி செல்வதால் அங்கு வைத்து கொலை செய்துவிடலாம் என திட்டமிட்டு இருக்கின்றனர். இதன்படி தான் சம்பவத்தன்று இரவு அவருடன் நடைப்பயிற்சிக்கு சென்ற அஞ்சு, ஆஷிஷை இன்றைக்கு வேறு இடத்துக்கு செல்வோம் என அழைத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
4 பேரையும் கைது செய்த போலீஸ்
அப்போது அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த சஞ்சு மற்றும் அவரது நண்பர்கள் என எல்லாரும் சேர்ந்து ஆஷிஷை கொலை செய்துள்ளனர். பின்னர் விபத்து நடந்ததாகவும், எங்கள் நகைகளை திருடிவிட்டதாகவும் சொல்லி போலீசாரையும் பெற்றோரையும் ஏமாற்றிவிடலாம் என திட்டமிட்டு இருந்துள்ளனர். ஆனால் போலீசார் விசாரணையில் இவை அனைத்தும் வெளிவந்துள்ளது.
இதையடுத்து அஞ்சு அவரது காதலன் சஞ்சு மற்றும் நண்பர்கள் ராக்கி (ரோஹித்), பாதல் (சித்தார்த்) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவில் பெண் செய்த சம்பவம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (30) - சோனம் (27) ஜோடியினர் திருமணம் ஆகி ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் மே 20ஆம் தேதி ஹனிமூனுக்கு வாங்க என கணவரை மேகாலயாவின் காசி ஹில்ஸுக்கு அழைத்து சென்றார் சோனம்.
பின்னர் ஊர் திரும்பியதாக கூறப்பட்ட நிலையில் இவர்களது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் உறவினர்கள் ஷாக் ஆகினர். அப்போது ராஜா பிணமாக மீட்கப்பட்டார். சோனத்திடம் விசாரித்த போது என் கணவரை யாரோ கட்டிப்போட்டுவிட்டு தன்னை கடத்தியாகவும், அவர்களிடம் இருந்து தான் தப்பி வந்ததாகவும் தெரிவித்தார்.
கூலிப்படையை ஏவி தீர்த்துகட்டினார்
ஆனால் சோனம் பேச்சி பல்வேறு முரண்பாடுகள் இருந்ததால் போலீசார் நடத்திய கிடிக்கிப்பிடி விசாரணையில் தான் கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. திருமணத்திற்கு முந்தைய காதலை மறக்க முடியாததால் இப்படி செய்ததாக கூறினார். இதையடுத்து சோனம் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் தேனிலவு 2.0 போன்று இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications