நள்ளிரவில் பகீர்! சென்னையில் சாதி ஆணவ படுகொலை! தங்கையை திருமணம் செய்தவரை வெட்டி கொன்ற அண்ணன் கைது
சென்னை: சென்னையில் இளைஞர் ஒருவர் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணன் தினேஷ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணங்களை இந்தியாவில் இன்னுமே பெரும்பாலான பெற்றோர் ஏற்பதில்லை. காதல் திருமணங்களைச் செய்து கொள்ளும் ஜோடிகளை சாதி ஆணவ படுகொலை செய்யும் சம்பவங்களும் கூட தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது தலைநகர் சென்னையிலேயே நடந்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் நடுரோட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை: சென்னை பள்ளிக்கரணை டாஸ்மாக் கடை அருகே நேற்றிரவு சுமார் 9 மணியளவில் நான்கு இளைஞர்கள் சேர்ந்த ஒருவரை திடீரென சரமாரியாக வெட்டி சென்றனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மருத்துவமனையில் அந்த இளைஞரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பள்ளிக்கரணை போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நபர் பள்ளிக்கரணை அம்பேத்கார் தெருவை சேர்ந்த பிரவீன் (26) என்ற இளைஞர் என்பது தெரிய வந்தது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

என்ன காரணம்: அதாவது பிரவீன் ஜல்லடியன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருப்பினும் இந்த காதலுக்குப் பெண்ணின் வீட்டார் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பெண்ணின் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் ஷார்மியை அழைத்துச் சென்று பிரவீன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் பிரவீன் மீது ஷர்மி வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்தச் சூழலில் தான் ஷர்மியின் அண்ணன் தினேஷ் தனது நண்பர்கள் 3 பேருடன் இணைந்து பிரவீனை நேற்றிரவு படுகொலை செய்துள்ளார். பிரவீன் பள்ளிக்கரணை டாஸ்மார்க் கடை அருகே திட்டமிட்டபடி அவரை மடக்கி சரமாரி வெட்டி வெட்டி கொலை செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்கையைப் பெற்றோர்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததால் அண்ணன் தினேஷ் கொலை செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.
தனிப்படை அமைப்பு: இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் தினேஷ் உள்ளிட்ட நான்கு பேரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக ஆணவப் படுகொலையில் ஈடுபட்ட தினேஷ் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே அரங்கேறிய இந்த சாதி ஆணவ படுகொலை பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications