கொரோனா பில்லுக்கு பணம் செட்டில் பண்ணலையே..கேட்ட ஓபிஎஸ்..மா.சுப்ரமணியம் சொன்ன மாஸ் பதிலால் சிரிப்பலை
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுங்கட்சி எதிர்கட்சி உறுப்பினர்களிடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும். கார சார பேச்சுக்களால் சில நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்படும். அவ்வப்போது அக்னி வெயிலுக்கு இதமாக பெய்யும் கோடை மழை போல பேரவையில் சிரிப்பலையும் எழும். உறுப்பினர்களின் கேள்விகள் கிண்டலாக ஒலிக்கும் போது அதற்கு கூறப்படும் பதில் நகைச்சுவையோடு இருக்கும் போது சட்டசபை சிரிப்பில் மூழ்கும். இன்று ஓ.பன்னீர் செல்வம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறிய பதிலால் சட்டசபை சிரிப்பலையில் மூழ்கியது.
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் காலையில் நீர்வளம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மானிய கோரிக்கையும், மாலையில் இயக்கூர்திகள் துறையின் மானிய கோரிக்கையும் நடைபெற்றது.

ஓ.பன்னீர் செல்வம் கேள்வி
இன்றைய கேள்வி நேரத்தின் போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சீரியஸ் ஆக ஒரு கேள்வியை முன் வைத்தார். கடந்த கொரோனா தொற்று காலத்தில் தொண்டுள்ளத்தோடு மருத்துவ பணி செய்த டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் உணவு வழங்கிய ரெஸ்டாரண்டுகளுக்கு இன்னும் உரிய பணம் தரவில்லை என்ற செய்தி என்னிடம் தரப்பட்டது. இது குறித்து அமைச்சரிடம் அறிய விரும்புகிறேன் என்று கேட்டார்.

நியாயமான பில்களுக்கு பணம்
இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் ஏற்கெனவே சட்டசபையில் இது பற்றி விவாதித்துள்ளோம். நியாமான கட்டணத்தில் நியாமான உணவை வழங்கிய நியாமான பில்களை செட்டில் செய்துவிட்டோம்.

உண்மையான ஹோட்டல்களுக்கு பில்
அநியாயமான முறையில் என்று அமைச்சர் சொன்ன உடன் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது..ஹோட்டலே இல்லாமல் உணவை கொடுத்ததாக சொல்லப்பட்டவர்களுக்குத்தான் பில்கள் செட்டில் செய்யாமல் வைத்துள்ளோம். அதுவும் கூட ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே உணவை தரமாக வழங்கி இருந்தால் பில் நிச்சயமாக செட்டில் செய்யப்படும் என்று கூறினார்.

கொரோனா காலங்கள்
கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு மே மாதம் வரை கொரோனா பரவல் காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கிய ஹோட்டல்களுக்கு கட்டணங்கள், உணவு விடுதிகளில் இருந்து சப்ளை செய்யப்பட்ட உணவுகளுக்கு கொடுக்கப்பட்ட பில்களுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடத்திருப்பதாக கடந்த 2021 ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே அமைச்சர் மா.சுப்ரமணியன் புகார் கூறியிருந்தார். அதனை நினைவூட்டும் வகையிலேயே இன்று சட்டசபையில் பதில் அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications