வீடு வாங்கறீங்களா? சென்னையில் வீடு விற்பனையில் சரிவு?.. ஒரேடியாக உயர்ந்த பதிவு கட்டணம்.. என்னாச்சு
சென்னை: பதிவுக்கட்டணத்தை, தமிழக அரசு உயர்த்திய நிலையில், இந்த கட்டண உயர்வு பரிசீலிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.. இந்நிலையில், கட்டண உயர்வால், வீடு விற்பனையில் அதிரடி மாற்றங்களும் நடக்க துவங்கி உள்ளன.
இந்த வருட துவக்கத்திலேயே நிலங்களின் வழிகாட்டி மதிப்பு, 50 சதவீதம் உயர்த்தப்பட்டது. பிறகு, பத்திரப்பதிவு கட்டணத்தை தமிழக அரசு சமீபத்தில் டபுள் மடங்காக உயர்த்தியிருந்தது. இது பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை தந்துவரும்நிலையில், தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம், 9 சதவீதம் வசூல் செய்யப்படும் என்று இன்னொரு அறிவிப்பும் அடுத்த சில நாட்களிலேயே வெளியானது.

அடுக்குமாடி குடியிருப்புகள்: அதாவது, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சமாக 1.15 லட்சம் வரை பதிவு கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில் இனிமேல் ரூ.2.25 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
இது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. காரணம், ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் தரவேண்டும். ஆனால், உடனே அடுத்த நடைமுறை வந்துள்ளது.. இந்த கட்டண உயர்வினால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் என்றும், கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.
பத்திரப்பதிவு: இதைத்தவிர, பத்திரங்களை பதிவு செய்வதில், பல்வேறு மாற்றங்களும் அமலாகி இருக்கின்றன.. இந்நிலையல், சென்னையில் வீடுகள் விற்பனை, 30 சதவீதம் குறைந்துள்ளதுவிட்டதாக ரியல் எஸ்டேட் தரப்பில் சொல்லப்படுகிறது. இதுகுறித்து, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
"அரசிற்கு வருவாய் தேவை அவசியம் தான் என்றாலும், நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்கும் தேவையையும், அரசு பூர்த்தி செய்ய வேண்டும் வீடு விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவால், வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், வீடு வாங்குபவர்களின் சுமையை குறைக்க, சில மாதங்களில் பத்திரப்பதிவு துறையில் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களையும், அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்டணம் வசூல்: இத்தனை நாளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேரும் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேருபவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படவும், இந்த கோரிக்கையை தமிழக அரசு நேற்றுதான் ஏற்றுக்கொண்டுள்ளது..
அதன்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் பட்டியல் இனத்தவர்களுக்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே சலுகை, அனைத்து தரப்பினருக்கும் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்று நம்பப்பட்டு வரும்நிலையில், ரியல் எஸ்டேட்கள் இந்த கோரிக்கையை விடுக்க ஆரம்பித்துள்ளன.
பதிவுத்துறை: அதுமட்டுமல்ல, பதிவுக்கான கூடுதல் செலவால், வீடு வாங்க முன்பதிவு செய்தவர்கள், பல இடங்களில் முன்பதிவை ரத்து செய்யும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. நடுத்தர, குறைந்த வருவாய் பிரிவினர் வாங்கும் வீடுகள் விஷயத்தில், இது, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், வீட்டுக்கடனுக்கான வட்டி உயர்ந்துள்ள நிலையில், பதிவுக் கட்டணமும் டபுள் மடங்கு உயர்ந்துள்ளதால், இந்த கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் நாலாபுறமும் கோரிக்கைகள் வெடித்து கிளம்பியபடியே உள்ளன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications