அப்பாயிண்ட்மெண்ட் வாங்க சொல்லுங்க.. தனுஷ் சொன்ன வார்த்தை.. போனை போட்ட நயன்தாரா.. என்ன நடந்தது?
சென்னை: இரண்டு மாதங்களுக்கு முன் நடிகை தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இடையே நடந்த முக்கியமான உரையாடல் காரணமாகவே இரண்டு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நயந்தாராவின் "nayanthara beyond the fairy tale" ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு ரிலீசுக்கு ரெடியான நேரத்தில்.. நடிகை நயன்தாரா நடிகர் தனுஷின் மேனேஜரிடம் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் பற்றி பேசி உள்ளார். இதன் டிரெய்லர் வெளியான சமயத்தில் அதை தனுஷ் தனது மேனேஜர் மூலமாக எதிர்த்து உள்ளார்.

இதையடுத்து தனுஷை நயன்தாரா போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் தனுஷ் போனை எடுக்கவில்லை. இதையடுத்து தனுஷின் மேனேஜரை போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அதேபோல் வொண்டர்பார் நிறுவனத்தின் மேனேஜரை போன் செய்து தொடர்பு கொண்டுள்ளனர்.
தனுஷ்.. தனது மேனஜர் மூலமாக.. நயன்தாரா இது பற்றி பேச வேண்டும் என்றால் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க சொல்லுங்கள். ஆபிஸ் வர சொல்லுங்கள் என்று கூறி உள்ளார். நயன்தாரா இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக நான் பேச முயன்றுவிட்டேன். தனுஷ் வேண்டுமென்றால் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொள்ளட்டும் என்று நடிகை நயன்தாரா கூறி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவே இரண்டு தரப்பிற்கும் இடையே மோதல் முற்றுவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அதன்பின் இரண்டு தரப்பிற்கும் ஆலோசனை நடக்க முயற்சிகள் நடந்தும் கூட.. ஆலோசனை நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
லீகல் நோட்டீஸ்: இப்படிப்பட்ட நிலையில்தான் நடிகர் தனுஷ் நடிகை நயன்தாராவிற்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் தனது லீகல் டீமுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா கடித்ததில் தனுஷை அவமானப்படுத்தும் விதமாக தகவல், கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக இந்த மான நஷ்ட வழக்கு தொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்த பின் முறையாக தனுஷ் தரப்பில் வழக்கு பதியப்படும் என்கிறார்கள்.
நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், பல தவறான விஷயங்களைச் சரிசெய்வதற்காக இந்த திறந்த கடிதத்தை நான் எழுதி உள்ளேன். உங்கள் தந்தை மற்றும் சிறந்த இயக்குனரான உங்கள் சகோதரரின் ஆதரவுடனும், ஆசியுடனும் ஒரு பிரபல நடிகராக நீங்கள் வலம் வருகிறீர்கள். உங்களை போல அல்லாமல் சினிமா என்பது என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம். சினிமாதொழில்துறையில் எந்த தொடர்பும் இல்லாத சுயமாக வந்த பெண் நான். நான் இன்று வகிக்கும் இந்த பதவிக்கு நான் போராட வேண்டியிருந்தது. அது சாதாரணமாக வரவில்லை.
நான் வெளியிடப்போகும் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தின் ரிலீஸ் எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மட்டுமல்லாது பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் அனுபவித்த அனைத்து சிரமங்களையும் கடந்து இந்த ஆவணப்படத்தை வெளியிட உள்ளோம். மிகப்பெரிய குழு இதற்காக பணிகளை செய்துள்ளது. இது என்னை பற்றிய, என் வாழ்க்கையை பற்றிய , என் திருமணத்தை பற்றிய, நான் சினிமாவில் வேலை பார்த்தவர்கள் பற்றிய ஆவணப்படும்.
ஆனால் என் வாழ்வில் முக்கியமான படமான.. நானும் ரவுடிதான் படத்தின் கிளிப் ஒன்றையும், பாடலையும் வைக்க முடியாமல் நான் போராடிக்கொண்டு இருக்கிறேன். இதற்காக கடந்த 2 வருடமாக உங்களிடம் என்ஓசி வாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இதனால் அந்த படத்தில் உள்ள பாடல் ஒன்றை கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளேன். அந்த படத்தில் வேலை பார்த்த சில புகைப்படங்களை கூட பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.ஆனால் இந்த காட்சிகள், பாடல்கள், புகைப்படங்களை நீங்கள் எங்களுக்கு கொடுக்காமல் போனது என் இதயத்தை நொறுக்குகிறது.
நீங்கள் பிஸ்னஸ் தேவைகள் மற்றும் பண தேவைகள் காரணமாக இப்படி செய்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் எங்கள் உங்களுக்கு வன்மம் காரணமாகவே நீங்கள் இப்படி செய்துள்ளீர்கள் என்பது தெரியும். உங்களின் இந்த வன்மம் மனதை வதைக்கிறது.நான் பர்சனலாக எடுத்த.. எங்கள் போனில் எடுத்த சில புகைப்படங்கள் வீடியோக்களை கூட பயன்படுத்த அனுமதிக்காமல் நீங்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக நீங்கள் 10 கோடி ரூபாய் கொடுத்ததும் கூட எங்கள் மனதை உருக்கி உள்ளது. உங்களின் மோசமான குணத்தை காட்டுகிறது. நீங்கள் எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டீர்கள் என்பதை இது காட்டுகிறது. எங்கள் மீது உங்களுக்கு உள்ள கோபம்தான் இதற்கு காரணம். 3 நொடி வீடியோவிற்கு 10 கோடி ரூபாய் கேட்பதில் என்ன நியாயம். எங்கள் உங்களுக்கு வன்மம் காரணமாகவே நீங்கள் இப்படி செய்துள்ளீர்கள் என்பது தெரியும். உங்களின் இந்த வன்மம் மனதை வதைக்கிறது.
நீங்கள் உங்களுடைய அடுத்த ஆடியோ லாஞ்சில் கதைகளை சொல்லி கட்டுக்கதையாக பேசுவீர்கள் என்று தெரியும். சினிமாவிற்கு வெளியே தனிப்பட்ட வகையில் இவ்வளவு வன்மத்தோடு நீங்கள் செயல்படும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது, என்று நயன்தாரா குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications