Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெயரே ‛தீபாவளி’ தான்.. இப்படி ஒரு கிராமமா? எங்கு இருக்கு தெரியுமா? பின்னணியில் சுவாரசிய காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி நாம் அனைவரும் கொண்டாடி வரும் இந்த வேளையில் ‛தீபாவளி' என்ற பெயரில் அழைக்கப்படும் கிராமம் பற்றியும், அந்த கிராமத்துக்கு ஏன் ‛தீபாவளி' என்ற பெயர் வந்தது? என்பது பற்றிய சுவாரசிய விஷயத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இன்று அக்டோபர் 31.. நாம் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

diwali 2024 diwali village 2024

ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாடி வரும் நமக்கு அதன் பின்னணி காரணம் என்னவென்று தெரிந்திருக்கும். அதேவேளையில் ‛தீபாவளி' என்ற பெயரில் இருக்கும் வினோத கிராமம் பற்றியும், அந்த கிராமத்துக்கு ‛தீபாவளி' என்ற பெயர் வந்ததன் சுவாரசிய பின்னணி நம்மில் பலருக்கும் தெரியாது. அதுபற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

‛தீபாவளி'.. என்ற பெயர் கொண்ட கிராமம் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஆந்திராவுக்கு உரித்தான மரபு, கலாசாரத்தை பின்பற்றுகின்றனர். கிராமத்தின் மக்கள்தொகை என்று பார்த்தால் மிகவும் குறைவு தான். மொத்தம் 1,000 பேர் தான் உள்ளனர்.

இந்த கிராமத்தின் பெயர் காரணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் சில நூறு ஆண்டுகள் பின்னுக்கு செல்ல வேண்டும். அதாவது சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தற்போது ‛தீபாவளி' என்று அழைக்கப்படும் கிராமத்துக்கு பெயர் என்பது இல்லை. ஆனால் இந்த பகுதியில் ஸ்ரீகூர்மநாதர் கோவில் என்பது இருந்தது. இந்த கோவிலுக்கு அடிக்கடி அந்த பகுதியை ஆண்ட மன்னர் வந்து தரிசனம் செய்து அரண்மனைக்கு சென்றுள்ளார்.

ஒருநாள் கோவில் தரிசனத்துக்காக மன்னர் மாலை வேளயைில் வந்தார். திடீரென்று அவர் மயங்கி விழுந்துள்ளார். மன்னர் மயங்கிய நிலையில் பேச்சு, மூச்சி இன்றி கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு வீட்டில் வைத்து ஆசுவாசப்படுத்தினர். மேலும் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து எழுப்பினர். அதன்பிறகு அவருக்கு தண்ணீர் வழங்கினர்.

அந்த காலத்தில் மின்விளக்கு எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனாலும் அங்கு வசித்த மக்கள் அவரை மீட்டு எண்ணெய் விளக்குகளின் உதவியுடன் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு பொதுமக்களிடம் மன்னர் கிராமத்தின் பெயரை கேட்டுள்ளார். அதற்கு அவர் பெயர் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதை கேட்ட மன்னர், ‛‛நீங்கள் எனக்கு எண்ணெய் விளக்கு உதவியுடன் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் இந்த பகுதிக்கு தீபாவளி என்று பெயரிடுகிறேன்'' என்று கூறியுள்ளார். இப்படியாக தீபாவளி என்ற கிராமம் ஆந்திராவில் உருவாகி உள்ளது. இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராமத்தில் 5 நாட்கள் வரை தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+