ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதியா வரணுமா? இதுதான் பெஸ்ட் டிரிக்ஸ்!
சென்னை: கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தில் பலரும் ஏசி ராத்திரி போட்டா, விடிய விடிய ஓடனும் என்பதே விருப்பமாக இருக்கிறது. அதேநேரம் கரென்ட் பில் குறைவாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். எனவே ஏசியை பயன்படுத்துபவர்கள் சில விஷயங்களை ஸ்மார்ட்டாக செய்வதன் மூலம் மின் கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும் அதை இப்போது பார்ப்போம்.
இப்போது கோடைக்காலம் என்பதால் வெயில் வழக்கத்தை விட மிக அதிகமாக உள்ளது. சூரியனுக்கு பக்கத்தில் உள்ள கோளாக பார்க்கப்படும் வேலூராக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் என தமிழகத்தின் எந்த ஊராக இருந்தாலும் சரி, பாரபட்சமே இல்லாமல் வெயில் கொளுத்துகிறது.
மக்கள் கோடைக்காலத்தில் வெப்ப பாதிப்பில் இருந்து தப்பிக்க ஏசி பயன்படுத்துகிறார்கள்.குறிப்பாக இரவு முழுவதும் ஏசி போடுகிறார்கள்.இப்படி பயன்படுத்தும் போது மின் கட்டணம் அதிகம் ஆகிறது. அவர்கள் கீழ்கண்ட விஷயங்களை செய்தால் மின் கட்டணம் கணிசமாக குறையும்.
முதல் டிப்ஸ்: பொதுவாக எல்லோரும் செய்யும் தவறு இதுதான். வெயில் காலத்திற்கு முந்தைய குளிர் காலத்தில் ஏசியை சுத்தமாக உபயோகிக்காமல் விட்டுவார்கள். சும்மாவே ஏசி இருந்திருக்கும். அப்படி பயன்படுத்தாமல் இருக்கும் ஏசியை, கோடைக்காலம் துவங்கும் போது கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும். அப்படி சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால், மின் கட்டணம் அதிகமாக வந்துவிடும். ஏன் மின் கட்டணம் அதிகமாகும் என்றால், நீண்ட நேரம் ஏசி நிறுத்தப்படுவதால், அதில் தூசி மற்றும் துகள்கள் அடைந்துவிடுகிறது. எனவே அந்த சூழ்நிலையில், குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்ய வேண்டி வரும். எனவே தான் கரெண்ட் பில் அதிகமாக வருகிறது. எனவே முதலில் மறக்காமல் சர்வீஸ் செய்யுங்கள்.

இரண்டாவது விஷயம்: ஏசி பயன்படுத்தும் போது, டக்குன்னு 16 அல்லது 18 டிகிரி செல்சியஸ் என்கிற அளவிற்கு குறைந்த வெப்பநிலையில் வைக்கக்கூடாது. இப்படி வைத்திருப்பது நல்ல குளிர்ச்சியை தருவதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி. அதனால் வெப்பநிலையை 24 ஆக வைத்திருங்கள், இது நிறைய மின்சாரத்தை சேமிக்கும். மேலும் ஏசியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமித்துவிடலாம்ன்னு பயன்படுத்துனவங்க சொல்றாங்க.. பாத்துக்கங்க மக்களே..
மூன்றாவது விஷயம்: ஏசி ஆன் செய்ய போறீங்க...அப்படீன்னா, அதற்கு முன்னாடி, அறையின் கதவு மற்றும் ஜன்னலை மூடிவிடுங்கள். அதனால் அனல் காற்று உள்ளே வராது, குளிர் காற்று வெளியே போகாது. கதவை மூடிவிட்டால் ஏசி அதிகமாக வேலை செய்வது குறையும். இதனால் மின் கட்டணமும் குறையும்,.

நான்காவது விஷயம்: ஏசி வாங்கும் போதே, அதிக ரேட்டிங் உள்ள ஏசிக்களை வாங்குங்கள். இந்த வகை ஏசிக்கள் ஸ்லீப் மோட் அம்சத்துடன் வருகின்றன. அவை தானாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரிசெய்துக் கொள்ளும். அதனால் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்கும்.
ஐந்தாவது விஷயம்: நீங்கள் ஏசி போடும் மின்விசிறியைப் பயன்படுத்தினால், அது அறையின் ஒவ்வொரு மூலைக்கும் ஏசி காற்றை கொண்டுச் செல்லும். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனுடன், ஏசியின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய தேவையும் ஏற்படாமல், மின்சாரத்தை சேமிக்க முடியும்.

நல்ல ஏசி வாங்குவது எப்படி? இன்வர்டெர் வகை ஏசிக்கள் அதிகமான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாமல், அறையைக் குளிரச் செய்யும். பொதுவாக ஒவ்வொரு ஏசிக்கும் ஒரு திறன் இருக்கும். அறையின் பரப்பளவைப் பொறுத்து 1 டன், 1.5 டன், 2 டன் என்றெல்லாம் ஏசிகள் இருக்கும். இன்வெர்ட்டர் ஏசிகளைப் பொறுத்தவரை சூழலைப் பொறுத்து கம்ப்ரஸரின் செயல்பாட்டை அவை கட்டுப்படுத்தும். இதன்மூலம் மின்சாரத்தின் தேவை பெரியஅளவில் குறையும். இதை ஆட்டோமெட்டிக்காகவே அவை மேற்கொள்ளும்.
உதாரணமாக, நீங்கள் 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி வைத்திருந்தால், அறை வெப்பநிலையைப் பொறுத்து 0.5 டன் முதல் 1.5 டன் வரையில் அது சூழலுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்யும். அதற்கேற்றபடி, இவை வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்ரஸரைக் கட்டுப்படுத்தும். இதன் மூலமாக மட்டும் 36 சதவீத மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும்.
அதேநேரம் 120 சதுர அடி பரப்பளவு கொண்ட உங்களின் பெட்ரூமுக்கு ஏசி வாங்கினால், அந்த அறையில் 3 மணி நேரத்துக்கு மேல் வெயில் படாது என்கிற சூழலில் இன்வெர்ட்டர் ஏசியை விட சாதாரண ஏசிதான் பெஸ்ட் என்கிறார்கள். அதேபோல், ஹால் அல்லது பெரிய அறைகள் போன்ற இடங்களில் இன்வெர்ட்டர் ஏசிதான் சரியாக இருக்கும் என்கிறார்கள். பொதுவாக பெரிய அறைகளில் சூரிய வெளிச்சம் அதிகம் படும் என்பதாலும், இடமும் கொஞ்சம் பெரிது என்பதால், மின்சார சிக்கனம் உள்ளிட்ட காரணங்களால் இன்வெர்ட்டர் ஏசியைப் பயன்படுத்தலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications