யோசனை.. தயக்கம்.. சம்மதம்! ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க டிடிவி தினகரன் ஒப்புக்கொண்டது எப்படி?
சென்னை: ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் பல ஆண்டுகளுக்கு பிறகு நேரில் சந்தித்து பேசியிருப்பது தான் தமிழக அரசியலில் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது.
நமக்கென்று தனிக்கட்சி, தனி நிர்வாகிகள் இருக்கும் போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதால் நமக்கு என்ன பயன் எனக் கருதி, அவரை சந்திக்க முதலில் அதிகம் யோசித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா முன்னெடுத்த தீவிர முயற்சியின் காரணமாகவும், அமமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகளை எடப்பாடி டீம் வளைத்து வருவதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என தினகரனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் எடுத்துக் கூறியதாலும் இந்தச் சந்திப்புக்கு ஒரு வழியாக ஓகே சொல்லியிருக்கிறார்.
எங்கே வைத்து சந்திப்பது என்ற பேச்சு எழுந்த போது இருவருக்கும் பொதுவான பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் எதேச்சையாக நிகழ்ந்த சந்திப்பை போல் காட்ட ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அப்படியெல்லாம் முடியாது, வேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வம் தன்னைத் தேடி தனது வீட்டுக்கு வந்து சந்திக்கட்டும் என டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து அப்ஜெக்சன் ஏதும் தெரிவிக்காத ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை அவரது இல்லம் தேடிச் சென்று பல ஆண்டுகளுக்கு பிறகு சில நிமிடங்கள் மனம் விட்டு குமுறியிருக்கிறார்.

பண்றதை எல்லாம் பண்ணிட்டு பேச்சைப் பார் என்ற நடிகர் கவுண்டமணியின் வசனத்தை போல் ஓபிஎஸ்ஸிடம் ஒரு ரியாக்ஷன் கொடுத்த டிடிவி தினகரன், பழைய கசப்புகளை வெளிக்காட்டாமல் எடப்பாடி டீம் பற்றியும் அவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் பேசியிருக்கிறார்.
இதனிடையே சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில அஸ்திரங்களை கையில் எடுப்பார்கள் எனத் தெரிகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications