விடாத கொடூரம்.. ஆந்திர பிரதேசம் - ஒடிசா ரயில் விபத்தை இணைக்கும் "அந்த புள்ளி".. 2க்கும் ஒரே காரணம்!
சென்னை: கடந்த ஜூன் மாதம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கும் இன்று ஆந்திர பிரதேசத்தில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கும் முக்கியமான ஒற்றுமை ஒன்று உள்ளது.
ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கியது. அங்கே அள்ள அள்ள உடல்களாக வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விபத்து இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது. பீகார் ரயில் விபத்தில் 1981ல் 800 பேர் இறந்தனர். அதேபோல் 1956ல் அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்தனர். அதற்கு இணையான விபத்து இப்போது ஒடிசாவில் ஏற்பட்டு உள்ளது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதவில்லை.
முதலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்தான் விபத்தில் சிக்கி உள்ளது. அதன்படி இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் வந்த போது அங்கே இருந்த மெயின் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலை கொண்டு செல்ல கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர்.
எப்படி நடந்தது: ரயில் கடந்த பின் சில நொடிகளில் அதை சிவப்பாக்கி உள்ளனர். அதாவது சிக்னல் கொடுத்தவர் தவறுதலாக கொடுத்துவிட்டு மாற்றி இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே செய்து இருக்கலாம். அல்லது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம். இப்போதுவரை விசாரணையில் இது தொழில்நுட்ப கோளாறாக காரணமாக ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை.
சிவப்பாக விளக்கு மாறியதை கவனிக்காமல் கோரமண்டல் முன்னோக்கி சென்றுள்ளது. அந்த பாதையில் இருந்த சரக்கு ரயிலில் கோரமண்டல் ரயில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
இந்த நேரத்தில்தான் 20 நிமிடம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன. இங்கே தவறாக சிக்னல் கொடுக்கப்பட்டதே காரணம் ஆகும்.
ஆந்திர பிரதேச விபத்து: இப்போது ஆந்திர பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தும் இப்படித்தான் ஏற்பட்டு உள்ளது. ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 10 பயணிகள் பலியாகி உள்ளனர்.

விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயிலும், பலாசா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதிக்கொண்டனர. ஆந்திர மாநிலம் கண்டகபள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதுதான் விபத்திற்கு காரணம்.
விசாகப்பட்டினத்தில் இருந்து ராய்காட் நோக்கி பயணிகளுடன் பயணித்த ரயில் பழுது காரணமாக அங்கே நின்று உள்ளது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதியதால் பெட்டிகள் தடம் புரண்டன. இரண்டாவது வந்த ரயிலுக்கு ஒரே நேரத்தில் கிரீன் விளக்கு கொடுக்கப்பட்டதே விபத்துக்கு காரணம். இதற்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications