சென்னையில் அதிகாலையில வீடு புகுந்த திருடனுக்கு நினைத்தே பார்க்க முடியாத ட்விஸ்ட்
சென்னை: சென்னை முகப்பேரு டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த கென்னடி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 5-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை மர்மநபர் ஒருவர் வீடு புகுந்ததை பக்கத்து வீட்டில் வசிப்பவர் பார்த்தார். அவர் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இறுதியில் போலீஸ் வந்த போது திருடன் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் திருடன்கள் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முயற்சிகளை கையாள்கிறார்கள்.. ஆனால் வீட்டிற்கு சிசிடிவி கேமரா இருந்தாலே அல்லது வீட்டின் கதவை ஜன்னலை யாராவது ஆள் இல்லாத போது திறந்தாலே அலாரம் அடிக்கும் வகையில் செட் செய்தால் திருடர்களிடம் இருந்து வீட்டை பாதுகாக்க முடியும். அப்படி பலர் செட்டிங் வைத்திருக்கிறார். வெளியூரில் இருந்தபடி வீட்டை கண்காணிக்க முடியும். ஆனால் இன்னமும் பலர் அந்த முயற்சிகளை செய்வது இல்லை.. சிசிடிவி கேமராக்களை வெளியில் மட்டும் வைத்திருப்பார்கள்..

சென்னையில் திருடன்
இந்நிலையில் சென்னையில் வீட்டுக்குள் புகுந்த திருடன் கதவை வெளிப்புறமாக பூட்டி சிறை வைத்த வாலிபர் போலீசுக்கு தகவல் அளித்தனர். கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டதால் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் திருடனை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
ஐகோர்ட் ஊழியர்
சென்னை முகப்பேர், அரசு தெரு, டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த 52 வயதாகும் கென்னடி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் 5-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார்.
பீரோவை உடைத்து திருட்டு
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த திருடன் ஒருவர், நேற்று அதிகாலை 3 மணி அளவில் கென்னடி வீட்டின் கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. அவரது வீட்டின் மாடியில் 26 வயதாகும் மோகனபிரியன் என்பவர் கீழே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர், கென்னடி வீ்ட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து திருடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பூட்டப்பட்ட கதவு
உடனடியாக புத்திசாலித்தனமாக வேலை செய்த மோகனபிரியன், தனது வீட்டில் இருந்த பூட்டை எடுத்து வந்து, கென்னடி வீட்டின் இரும்பு கதவை வெளிப்புறமாக பூட்டினார். திருடனை வீட்டுக்குள் சிறை வைத்தார். பின்னர் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்..
உள்புறமாக சாத்தப்பட்டது
தன்னை வீட்டுக்குள் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டியதால் அதிர்ச்சி அடைந்த திருடன், வீட்டின் மரக்கதவை பூட்டி உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் வீட்டின் மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, வீட்டுக்குள் பதுங்கி கொண்டிருந்தார். சம்பவ இடத்துக்கு ஜெ.ஜெ.நகர் போலீசார் விரைந்து வந்தனர். இரும்பு கதவின் பூட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றுள்ளார்கள். அப்போதுதான் திருடன், மரக்கதவை உள்புறமாக பூட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸ் எச்சரிக்கை
போலீசார் வெகு நேரமாக கதவை தட்டியும், கூப்பிட்டு பார்த்தும் திருடன் பதில் ஏதும் கூறாமல் மவுனமாக இருந்தார். கதவை திறந்து வெளியே வரும்படி போலீசார் பலமுறை எச்சரித்தும் திருடன் கண்டுகொள்ளவில்லை. இதனால் கதவை உடைக்க நினைத்த ஜெ.ஜெ. நகர் போலீசார், உடனடியாக ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பாலமுருகன் கைது
தீயணைப்பு நிலைய அலுவலர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் முத்துக்குமார், ராஜகுரு, சத்யராஜ், ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, உள்புறமாக பூட்டி இருந்த கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்றுள்ளார்கள். அங்கு படுக்கை அறையில் இருந்த கட்டிலுக்குள் அடியில் பதுங்கி இருந்த திருடனை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், கொடுங்கையூர் சேதுபதி தெருவை சேர்ந்த 27 வயதாகும் பாலமுருகன் என்பதும், இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிந்தது. பாலமுருகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications