பாஜக + 2 சீட் பிளான்.. மொத்தமும் சொதப்பல்.. வேட்டு வைத்த எடப்பாடி? உச்சகட்ட டென்ஷனில் ‘கூல்’ தலைவர்!
சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேலிடம் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதும், அரசியல் ரீதியாக எடப்பாடியின் கை ஓங்கி வருவதும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சற்றே யோசிக்க வைத்திருக்கிறதாம். 2024 தேர்தல் தொடர்பாக டிடிவி தினகரன் அமைத்திருந்த வியூகத்திற்கு ஈபிஎஸ் சிக்கல் கொடுத்துள்ளது 'கூல்' தலைவரான தினகரனை டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம்.
அண்ணாமலைக்கும் அதிமுகவினருக்கும் இடையே நடந்து வந்த தொடர் கருத்து மோதலால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா என்ற கேள்வி இருந்தது. டெல்லியில் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டாவை எடப்பாடி பழனிசாமியும் அவரது அணியினரும் சந்தித்துப் பேசிய பின்னர் அதிமுக பாஜக கூட்டணி தொடர்வது உறுதியாகியிருக்கிறது.

நடவடிக்கையில் மாற்றம் : அதைத்தொடர்ந்து, அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல, எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் எந்த தகராறும் இல்லை என்று அண்ணாமலையும் தெரிவித்தார். பாஜக - அதிமுக கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ள அதேசமயம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் ஒற்றுமையாக இருந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும், அதை ஈபிஎஸ் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக வலுவாகவே இருப்பதாகவும், தினகரன், ஓபிஎஸ் பக்கம் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தம் பக்கம் சேர்ந்து வருவதாகவும் அமித் ஷாவிடம் கூறியிருக்கிறாராம் ஈபிஎஸ்.
டென்ஷன் ஆன கூல் தலைவர் : இந்த தகவல் அறிந்து ஓபிஎஸ் தரப்பு அப்செட் ஆனது ஒருபக்கம் என்றால் டிடிவி தினகரன் கூடுதல் உஷ்ணத்தில் இருக்கிறாராம். கடந்த பல மாதங்களாகவே பாஜக - அதிமுக கூட்டணியில் 2024 தெர்தலைச் சந்திக்கும் திட்டத்தோடு இருக்கிறார் தினகரன். தேனி மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளை அமமுகவுக்காக தயார் செய்து வந்தார் தினகரன்.
தினகரனின் திட்டத்துக்கு பாஜகவும் ஓகே சொல்லியிருந்ததாம். சிவகங்கை தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இந்த முறை போட்டியிடப் போவதில்லை, அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதால் நிச்சயம் தனக்கு பாஜகவில் சீட் என்ற கணக்கில் இருந்து வந்தார் தினகரன். எடப்பாடி பழனிசாமி தான் தன்னை எதிர்க்கிறார், அவரை பாஜக டீல் செய்துகொள்ளும் என்ற எண்ணத்தில் இருந்தார் டிடிவி.
வியூகம் பனால்? : இந்நிலையில் தான் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதும், அவர் செல்வாக்கு அதிகரிப்பதும் தினகரனுக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளதாம். அமமுக உடன் கூட்டணி இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருவதையும், பாஜக எடப்பாடி பழனிசாமியை ஃப்ரீயாக விட்டு வருவதையும் தினகரன் ரசிக்கவில்லையாம்.
தன் பக்கம் இருந்து முக்கிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி வலைவீசித் தூக்கி வருவதால் கோபத்தில் இருக்கும் தினகரன், பாஜக தலைமைக்கு நெருக்கமான சில புள்ளிகளிடம் மெசேஜ் பாஸ் செய்ய விரும்பியிருக்கிறாராம். ஆனால், பாஜக தலைகள் தினகரனின் அழைப்பை உதாசீனம் செய்கிறார்களாம். இதனால், 2024 தேர்தலிலும் தனது வியூகங்கள் பலிக்காதோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறாராம் தினகரன்.












Click it and Unblock the Notifications