Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியெல்லாமா நடக்குது? சென்னையில் சொந்த வீடு வச்சிருக்கீங்களா.. வாடகைக்கு குடியிருக்கீங்களா..உஷார்

சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் காலியாக உள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து, அதை பொதுமக்களுக்கு லீஸ்க்கு விட்டு, ஏராளமானோரை மோசடி செய்த வீட்டு புரோக்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வாடகைக்கு குடியிருக்க விரும்பும் மக்கள், அவர் தான் உண்மையான ஓனரா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லதாகும். ஏனெனில் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் காலியாக உள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து, அதை பொதுமக்களுக்கு லீஸுக்கு விட்டு, ஏராளமானோரை மோசடி செய்த வீட்டு புரோக்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைதான புரோக்கரிடம் வீட்டு உரிமையாளர்களும், வாடகைக்கு குடியிருப்போரும் பல லட்சங்களை ஏமாந்து இருக்கிறார்கள். இதேபோன்று ஏமாறாமல் இருக்க, இங்கு என்ன நடந்தது என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

சென்னையில் வாடகைக்கோ அல்லது லீசுக்கோ நல்ல வீடு அமைவது என்பது மிகப்பெரிய வரம் ஆகும். வாடகையோ, லீசோ எவ்வளவாக இருந்தாலும், தனிவீடாக இருந்தால் மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் அப்படி கிடைப்பது கடினம் ஆகும். வீட்டின் மேல்மாடியிலோ அல்லது கீழ் மாடியிலோ வீட்டின் உரிமையாளர்கள் இருப்பார்கள். சத்தமாக பேசக்கூடாது. நான்கு பேர் புதிதாக வீட்டுக்கு வந்துவிடக்கூடாது. தண்ணீர் அதிகம் செலவழிக்கக்கூடாது. முறைவாசல் தினமும் செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருக்கும்.

மாத வாடகை

மாத வாடகை

சென்னையின் மையப்பகுதிகள் என்றால் 6 மாதம் முதல் 10 மாத அட்வான்ஸ் பணத்தை வாடகைக்காக பெறுவார்கள். கரண்ட் பில் யூனிட்டுக்கு 8 ரூபாய், மோட்டார் போட தனியாக கட்டணம் என வாடகைக்கு குடியிருப்பவர் பணத்தை மாதம் மாதம் கட்ட வேண்டும் . இதுமட்டுமின்றி சிங்கிள் பெட்ரூம் குடியிருப்பே 10 ஆயிரம் அல்லது 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.

கரண்ட் பில்

கரண்ட் பில்

இதனால் மக்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் வாடகைக்கு வீடு பார்க்கிறார்கள். அங்கு 10 ஆயிரம் அல்லது 12 ஆயிரம் ரூபாய்க்கு மிகப்பெரிய வீடுகள் கிடைக்கும். தண்ணீருக்கு தனி கட்டணம் இல்லை. வாடகையும் குறைவாக இருக்கும். கரண்ட் பில் என்னவோ அதை கட்டினால் போதும் என்று இருக்கும். இதேபோல் லீஸ் வீடு என்றாலும் சென்னையின் மையப்பகுதியை ஒப்பிடும் போது, சென்னையின் புறநகர் பகுதிகளில் லீஸ் தொகை குறைவாகவே இருக்கும். அதனால் லீஸ்க்கு வீடு பார்ப்பவர்களும் அதிகமாக உள்ளனர்.

சேலையூர் ரியல் எஸ்டேட்

சேலையூர் ரியல் எஸ்டேட்

மக்களின் இந்த தேவைகளை புரிந்து கொண்டு சரியாக சேவை செய்யும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சென்னையில் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆனால் அதேநேரம் ஒரு சில புரோக்கர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு சில தில்லாலங்கடி வேலைகளை செய்வது உண்டு. அப்படித்தான் சென்னை சேலையூரில் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் செய்த செயல். சென்னை தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.

குத்தகை விளம்பரம்

குத்தகை விளம்பரம்

சென்னை சேலையூர், கிழக்கு தாம்பரம், ஆதி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ், வயது 37. இவர் வீட்டு புரோக்கர். புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், சிட்லப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், காலியாக உள்ள வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொள்ளும் தங்கராஜ், தன்னிடம் வாடகைக்கு ஆள் உள்ளனர் என கூறுவார். இதை நம்பி வரச்சொல்லும் வீட்டின் உரிமையாளர்களிடம், வாடகையில் 1,000 ரூபாயை வாடகைதாரர்களிடம் கூடுதலாக கூறி, அதை தான் பெற்றுக் கொள்வதாகவும் வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்த வீடுகளை, 'ஆன்-லைன்' மூலம் வாடகை மற்றும் குத்தகைக்கு விளம்பரமும் செய்திருக்கிறார்.

ஏமாற்றிய தங்கதுரை

ஏமாற்றிய தங்கதுரை

விளம்பரத்தை பார்த்து, புரோக்கர் தங்கராஜை பலரும் தொடர்பு கொண்டு, வீடுகளை கேட்டிருக்கிறார்கள். அப்படி வருவோரிடம், ஆண்டு குத்தகைக்கு பேசி, 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை பெற்று, வீடுகளை விட்டிருக்கிறார். அதேநேரத்தில், வீடுகளை குத்தகைக்கு விட்டது தெரியாமல் இருக்க, மாதந்தோறும் தானே வாடகை தொகையை வசூலிப்பது போல் வீட்டு உரிமையாளர்களிடம் தொகையை கொடுத்து வந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+