முதல்முறையாக.. தேசிய அரசியலில் சாட்டையடி அடிக்கும் காங்கிரஸ்.. கார்கே கலக்குறாரே.. அதிரும் "தாமரை"
சென்னை: தேசிய அரசியலில் கடந்த 10 வருடங்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறந்த தேர்தல் நடவடிக்கையாக.. காங்கிரஸ் இரண்டு நடவடிக்கைகளை கடந்த 2 நாட்களில் எடுத்துள்ளது.
தேசிய அரசியலில் காங்கிரஸ் தொடர்ச்சியாக கள அரசியலை என்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது வரை கள அரசியலில் என்னவோ காங்கிரஸ் தொடர்ச்சியாக இருக்கவே செய்கிறது.

ஆனால் தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால்தான் காங்கிரஸ் சொதப்பியது. சரியாக கூட்டணி அமைக்காதது, திமுக அல்லாத மற்ற மாநில கட்சிகளுடன் இறங்கி செல்லாதது என்று காங்கிரசின் ஒவ்வொரு நகர்வும் அந்த கட்சிக்கு கடுமையான பின்னடைவை கொடுத்தது.
இந்தியா கூட்டணி: கடந்த லோக்சபா தேர்தலில் கூட உத்தர பிரதேச வாக்கு வங்கியை பார்க்கையில்.. சமாஜ் வாதி - காங்கிரஸ் கூட்டணி வைத்து இருந்தால் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருந்திருக்கும் என்றே கூறப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமே அங்கே 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது.
ஆனால் காங்கிரஸ்தான் கூட்டணி வைக்காமல் முரண்டு பிடித்துக்கொண்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் தேசிய அளவில் காங்கிரஸ் பல மாநில கட்சிகளுடன் இணைந்து இந்திய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி உள்ளது .
பின்னடைவு: இது போக திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி இந்திய கூட்டணியில் லோக்சபா தேர்தலை மேற்கு வங்கத்தில் சந்திக்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டார். நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .. ஆனால் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் ஆம் ஆத்மியும் பஞ்சாப்பில் இந்தியா கூட்டணியில் போட்டியிடாமல் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துவிட்டது. இதனால் எங்கே இந்தியா கூட்டணி உடைக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது.
காங்கிரஸ் சுவாரசியம்: இப்படிப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 2 பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு உறுதியாகி உள்ளது.
டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா 2024 தேர்தலில் 05 மாநிலங்களில் INC & AAP கூட்டணியை இறுதி செய்துள்ளன
டெல்லி: காங்கிரஸ் 3 இடங்களில் போட்டியிடுகிறது
ஹரியானா: ஆம் ஆத்மி 1 தொகுதியில் போட்டியிடுகிறது
குஜராத்: ஆம் ஆத்மி 2 இடங்களில் போட்டியிடுகிறது
அசாம்: ஆம் ஆத்மி 0 தொகுதியில் போட்டியிடுகிறது
சண்டிகர்: காங்கிரஸ் மொத்தமாக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது போக உத்தரபிரதேசத்தில் 17 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும், மீதமுள்ள 63 இடங்கள் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) மற்றும் இந்திய கூட்டணியின் மற்ற கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து 2 மாநிலங்களில் காங்கிரஸ் அதிரடியாக கூட்டணியை இறுதி செய்துள்ளது., ஏற்கனவே தமிழ்நாட்டில் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில், இன்னும் 2 பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் அடித்து ஆடி உள்ளது. வரும் நாட்களில் மேலும் சில மாநிலங்களில் காங்கிரஸ் இதேபோல் கூட்டணியை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications