கோவாக்சின் தடுப்பு மருந்து.. மனித உடலில் பரிசோதனை... எத்தனை நாட்கள் ஆகும்!!!
சென்னை: உலகத்தையே ஆட்டம் காண வைத்திருக்கும் கொரோனா வைரஸ். உலகிலிருந்து கண்ணுக்குத்தெரியாத இந்த வைரஸ் எப்போது ஒழியும் என்று தினமும் மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர். குறைந்தது இதைத் தடுக்க தடுப்பு ஊசியாவது வராதா என்ற ஏக்கம், தவிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வகையில் தான் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து கடந்த திங்கள் கிழமையில் இருந்து இந்தியாவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், புனேவில் இருக்கும் தேசிய வைராலாஜிநிறுவனம், ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ஆகியவை கோவாக்சின் மருந்தை கண்டுபிடித்துள்ளன.

SARS-CoV-2 மருந்தின் நீட்சி:
கடந்த திங்கள் கிழமையில் இருந்து டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ், ஐதராபாத்தில் இருக்கும் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனம், ரோதக்கில் இருக்கும் பிஜிஐஎம்எஸ் ஆகிய மருத்துவமனைகளில் பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. SARS-CoV-2 என்ற மருந்தில் இருந்து கோவாக்சின் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மனிதருக்கான வயது வரம்பு:
கோவாக்சின் தடுப்பு மருந்து ஏற்கனவே பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இரண்டு கட்ட பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைக்கு 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அதுவும் வேறு எந்த நோய் உபாதைகளும், கொரோனா தொற்றும் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முதல் கட்ட பரிசோதனைக்கு 375 தன்னார்வலர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களில் 40 முதல் 50 பேர் தமிழகத்தில் சென்னையில் இருக்கும் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இன்று இந்த மருத்துவமனையில் பரிசோதனை துவங்கியுள்ளது.
குறைவான நபர்கள்:
முதல் கட்டமாக 0.5 மிலி கோவாக்சின் மருந்து தன்னார்வலர்களுக்கு செலுத்தப்படும். குறைவான எண்ணிக்கையில் நபர்கள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். பாதுகாப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். கையின் மேல்புறத்தில் நார்மலாக செலுத்தப்படும் ஊசி மருந்து போன்றே செலுத்தப்படும். இவர்கள் தினமும் அவர்களது அன்றாட வேலைகளில் ஈடுபடலாம். மக்களுடன் மக்களாக கலந்து பணியாற்றலாம், செல்லலாம்.

28 நாட்கள் கண்காணிப்பு:
இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவார்கள். 14 நாட்கள் முடிந்து, இரண்டாவது பரிசோதனைக்காக மீண்டும் கோவாக்சின் மருந்து செலுத்தப்படும். இதையடுத்து, தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களது ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்படும். அதில் எவ்வாறு அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது என்று பார்க்கப்படும். இதுபோல் மொத்தம் 50 பேரின் பரிசோதனை மாதிரிகள் கிடைத்த பின்னர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் முடிவுகள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தில் முன்னணி
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சோதனையில் இந்தியா பின் தங்கி உள்ளது. ஆனால், நாமும் உலக அரங்கில் இருக்கிறோம் என்ற பெருமையும் சேர்ந்துள்ளது. தற்போது ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து ChAdOx1-S என்ற தடுப்பு மருந்தை கண்டிபிடித்துள்ளது. இது மூன்றாம் கட்ட ஆய்வில் உள்ளது. புனேயில் இருக்கும் செரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்துள்ளது. இந்தியாவில் ரூ. 1000 என்ற விலையில் இந்த தடுப்பு மருந்தைக் கொடுக்க செரம் முன்வந்துள்ளது.
மடெர்னா மூன்றாம் கட்டத்தில் உள்ளது. mRNA என்ற பெயரில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. இவை தவிர உலக அளவில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனையில் ஆறு மருந்து நிறுவனங்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications