2 நாள் கணக்கு.. சத்தமின்றி மும்பை வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தோனி.. செம பிளான்.. எப்படி நடந்தது?
சென்னை: சிஎஸ்கே அணியில் சாம் கரனுக்கு மாற்று வீரராக இளம் வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டு உள்ளார். பொதுவாக மாற்று வீரர்களை சிஎஸ்கே அணி எடுக்காது. ஆனால் இப்போது சிஎஸ்கே எடுத்திருக்கும் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர்களில் ஒருவர் சாம் கரன். கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் அவதிப்பட்டு வந்தார். இந்த சீஸனின் இரண்டாம் பாதி ஆட்டங்களிலும் இவர் சரியாக ஆடவில்லை.
இதனால் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே சாம் கரன் வெளியேறி இருக்கிறார். அதோடு உலகக் கோப்பை டி 20 தொடரில் இங்கிலாந்து அணியில் இருந்தும் சாம் கரன் வெளியேறி உள்ளார்.

என்ன
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணியில் சாம் கரனுக்கு மாற்று வீரரான டோம்னிக் ட்ரேக்ஸ் என்ற இளம் வீரர் சேர்க்கப்பட்டு உள்ளார். பொதுவாக சிஎஸ்கே அணியில் ஒரு வீரர் இல்லை என்றால் மாற்று வீரராக கொண்டு வர யோசிப்பார்கள். முக்கியமாக சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் ரெய்னா, ஹர்பஜன் திடீரென வெளியேறினார்கள். அப்போது இரண்டு பேருக்குமே சிஎஸ்கே மாற்று வீரரை எடுக்கவில்லை.

சமநிலை
அணியின் சமநிலை பாதிக்கும் என்பதால் மாற்று வீரரை எடுப்பதில் சிஎஸ்கே நிர்வாகம் கொஞ்சம் யோசிக்கும். இந்த சீஸனின் முதல் பாதியில் மட்டும் ஜோஷ் ஹஸல்வுட்டிற்கு பதிலாக மாற்று வீரராக ஜேசன் பெஹன்டிராப் எடுக்கப்பட்டார். ஆனாலும் அவர் அணியில் இணையும் முன் ஆட்டம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் சாம் கரண் வெளியேறி 24 மணி நேரத்திலும் சிஎஸ்கே மாற்று வீரராக டோம்னிக் ட்ரேக்ஸ் என்ற வீரரை அறிவித்துள்ளது.

டோம்னிக் ட்ரேக்ஸ்
டோம்னிக் ட்ரேக்ஸை சிஎஸ்கே திட்டமிட்டுதான் களமிறக்கி உள்ளது என்கிறார்கள். ஏனென்றால் சிஎஸ்கே அணியில் இப்போதும் கூட மிட்சல் சான்டர் போன்ற ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். ஆனாலும் சிஎஸ்கே அணி டோம்னிக் ட்ரேக்ஸை எடுத்துள்ளது. காரணம் இவர் வலைப்பயிற்சியில் மிக சிறப்பாக ஆடி இருக்கிறார். மும்பை அணியின் நெட் பவுலராக இருக்கும் இவர் சிறந்த ஆல் ரவுண்டர். மும்பை அணி ப்ளே ஆப் வராது, வந்தாலும் இவரை பயன்படுத்தாது என்பதால் தோனி இவரை சிஎஸ்கே பக்கம் கொண்டு வந்துள்ளார்.

முக்கியம்
அதோடு முக்கியமாக இவர் ஏற்கனவே மும்பை அணியில் பயோ பபுளில் இருக்கிறார். இவர் சிஎஸ்கே பபுளுக்கு மாறினால் எந்த சிக்கலும் கிடையாது. 2 நாள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த இரண்டு நாள் கணக்கு காரணமாக மிக எளிமையாக இவர் சிஎஸ்கே அணியோடு இணைய முடியும். இதெல்லாம் போக ஒருவேளை பிராவோவிற்கு காயம் ஏற்பட்டால் டோம்னிக் ட்ரேக்ஸ் ஆடும் வாய்ப்புகள் உள்ளன.

பிராவோ
பிராவோவிற்கு காயம் ஏற்பட்டால் ஒரு வெளிநாட்டு பாஸ்ட் பவுலர் குறைவாக இருப்பார். அப்படிப்பட்ட நேரத்தில் டி 20 அனுபவம் கொண்ட டோம்னிக் ட்ரேக்ஸ் உதவியாக இருப்பார். டோம்னிக் ட்ரேக்ஸ் 23 வயது மட்டுமே கொண்ட இளம் வீரர் ஆவார். பர்பாடியன் நாட்டை சேர்ந்த இவர் முன்னாள் மேற்கு இந்திய தீவுகள் வீரர் வாஸ்பர்ஸ் டிரேக்ஸின் மகன் ஆவார். இவர் சிபிஎல் தொடரில் மிக சிறப்பாக ஆடி வந்தார். சிபிஎல்லில் பிராவோ வழி நடத்தும் அணியான செயின்ட் கிட்டிஸ் அணியில் இவர்தான் முக்கிய பவுலர்.

வெற்றி
செயின்ட் கிட்டிஸ் அணின் வெற்றிகரமான சீசனுக்கு இவர்தான் முக்கிய காரணம். இதனால்தான் பிராவோ கொடுத்த வழிகாட்டுதலின்படி அணிக்குள் டோம்னிக் ட்ரேக்ஸ் எடுக்கப்பட்டு இருக்கிறார். எதிர்காலத்தில் சிஎஸ்கேவில் பிராவோவை மாற்ற போகும் கரீபியன் வீரராக இவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிராவோ இப்போதே காயம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். இடதுகை பவுலரான இவர் 11 போட்டிகளில் 16 விக்கெட் எடுத்துள்ளார். 24 பந்துகளில் ஒரு போட்டியில் 48 ரன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications