"காத்திருக்கும் பேரழிவு.." உலகின் மிக பெரிய அகதிகள் முகாமில்.. சம்பவம் செய்ய போகும் மோச்சா புயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீவிர புயலாக வலுவடைந்த மோச்சா, இப்போது மெல்ல வங்கக் கடலில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் உலகின் மிக பெரிய அகதிகள் முகாமை தாக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நமது நாட்டில் கோடைக் காலத்தில் வெயில் வெளுத்து வாங்கும். பல இடங்களிலும் கோடை வெயில் ஈஸியாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தைத் தாண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. இந்தாண்டும் பிப். மாதமே வெப்பம் உச்சத்தைத் தொட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப். மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவானது.

 How Cyclone Mocha is strengthening and heading to world’s largest refugee camp

புயல்: கோடை வெயில் நம்மை வைத்துச் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.. இதனால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான வானிலை இருந்தது. இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்லக் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.

தென்கிழக்கு வங்கக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மோச்சா புயலாக வலுவடைந்தது. இந்த புயல் தொடர்ச்சியாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்றது. கோடைக் காலத்தில் அவதிப்பட்டு வந்த நமக்கு இந்த புயல் சற்று நல்ல மழையைத் தரும் இருக்கும் என்றே எதிர்பார்த்தோம்.

 How Cyclone Mocha is strengthening and heading to world’s largest refugee camp

இருப்பினும், வங்கக் கடலில் உருவான இந்தப் புயல் வடமேற்கில் நகர்ந்து சென்றுவிட்டது. இதனால் தமிழகத்திற்குப் பெரியளவில் மழைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்த புயலுக்கு மோச்சா எனப் பெயரிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான இந்த வெப்பமண்டல சூறாவளி தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

மிகப் பெரிய அகதிகள் முகாம்: இந்தப் புயல் மேற்கு மியான்மர் மற்றும் வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரைத் தாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் அங்கே தான் சுமார் 10 லட்சம் மக்களை கொண்ட உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமாகக் கருதப்படும் முகாம் இருக்கிறது. இந்தப் புயல் அதீத வலிமையில் சுமார் 200 கிமீ வேகத்தில் கூட காற்று வீசும் என கூறப்படுகிறது. அப்படியிருக்கும் போது இந்த அந்த அகதிகள் முகாமை தாக்கினால் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.

 How Cyclone Mocha is strengthening and heading to world’s largest refugee camp

இந்த ஆண்டு வங்கக் கடலில் உருவாகும் முதல் புயலாக இது இருக்கிறது. இது ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடக்கும் முன்பு, மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேற்கு மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில், வங்கதேச எல்லைக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

220 கிமீ வேகம்: மோச்சா இன்று வெள்ளிக்கிழமை டைப் 1 அட்லாண்டிக் சூறாவளிக்குச் சமமாக வலுப்பெற்று, மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக டைபூன் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்தப் புயலால் சூறைக் காற்று அதிகபட்சமாக 220 கிமீ வேகத்தில் வீசக்கூடும். கரையைக் கடக்கும் நேரத்தில் இது டைப் 4 அட்லாண்டிக் சூறாவளிக்குச் சமமாக வலுவடையும் எனக் கூறப்படுகிறது.

 How Cyclone Mocha is strengthening and heading to world’s largest refugee camp

இந்திய வானிலை மையமும் இது தீவிர புயலாவ வலுப்பெறும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகதிகள் முகாம்: கடந்த 2017இல் மியான்மரில் ராணுவ அடக்குமுறை தீவிரமடைந்த போது, அங்கிருந்து தப்ப ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த பலரும் தங்கள் சொந்த நாட்டை இழந்து வங்கதேசம் வந்தனர். அவர்கள் அனைவரும் இப்போது, காக்ஸ் பஜாரில் உள்ள அகதிகள் முகாமில் தான் வசிக்கின்றனர். இது உலகின் மிகப் பெரிய அகதிகள் முகமாக இருக்கிறது. அந்தளவுக்கு மிகப் பெரிய அகதிகள் முகமாக இது இருக்கிறது.

இந்தப் பகுதியில் பலத்த காற்று, மழை மற்றும் மலைச் சரிவு ஏற்படும் ஆபத்தும் அதிகமாகவே இருக்கிறது. அங்கே இருக்கும் அகதிகளுக்குப் பாதுகாப்பான சூழல் இல்லை என ஏற்கனவே குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில் இந்த வலுவான புயலும் அவர்களைத் தாக்கினால் அகதிகள் முகாமே சின்னாபின்னமாகிவிடும்..

இதனால் அவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்தப் புயல் கரையைக் கடந்தால் மட்டுமே அந்தப் பகுதியில் பாதிப்பு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+