எடப்பாடிக்கு சாமர்த்தியம்தான்.. ஒரே கல்லில் 2 மாங்காய் அடிச்சிட்டாரே! டெல்லியும் தந்த கிரீன் சிக்னல்
சென்னை: டெல்லி பயணம் மூலம் அதிமுக - பாஜக கூட்டணியை அதிகாரபூர்வமற்ற முறையில் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளார். இன்னொரு பக்கம் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தின் என்ட்ரிக்கு முழுமையாக முட்டுக்கட்டை போட்டுள்ளார். டெல்லி உதவியுடன் அவர் மீண்டும் அதிமுகவிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. அதெல்லாம் இல்லை என்பதை எடப்பாடி அடித்து சொல்லி இருக்கிறார்.
அமித் ஷா - எடப்பாடி நடத்திய மீட்டிங்கில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கேட்கப்படாது. இதற்கான அழுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படாது. அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவில் இனி ஓ பன்னீர்செல்வம் சேர்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வேண்டுமென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது. இப்படி ஒரே டெல்லி பயணத்தில் எடப்பாடி இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.
எடப்பாடி சொன்னது என்ன?
ஓபிஎஸ், பிரிந்தது, பிரிந்தது தான். இனி சேர்வதற்கு சாத்தியம் கிடையாது.. கட்சியை எப்போது எதிரிகளிடம், அடமானம் வைத்தாரோ, கட்சியின் தலைமை கழகத்தை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவிலை என்று அவர் உடைத்தாரோ அவருக்கு அந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்து இதை உறுதி செய்துள்ளார்.
தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் உடல் இன்று திருநெல்வேலியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. ஆகவே, கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை தந்தார்.
பின்னர், கார் மூலம் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது அவர் கூறுகையில், நேற்று முன்தினம் உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை பல்வேறு திட்டத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கின்றேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசிற்கு வர வேண்டிய நீதி தாமதமாகி உள்ளது. அது தொடர்பாகவும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அண்ணா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும் என்ற நிலைப்பாடு. அதனை வலியுறுத்தியும் மனு கொடுத்துள்ளோம்.
ஓபிஎஸ் நானும் பிரிந்தது, பிரிந்தது தான். இனி சேர்வதற்கு சாத்தியம் கிடையாது.. கட்சியை எப்போது எதிரிகளிடம், அடமானம் வைத்தாரோ, கட்சியின் தலைமை கழகத்தை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவிலை என்று அவர் உடைத்தாரோ அவருக்கு அந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை.
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அதிமுக ஆட்சியில் நிவாரணம் அனைத்தும் அளித்தோம்.. ஆனால் இந்த ஆட்சியில் அவ்வாறு இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல., ஒத்த கருத்துள்ள கட்சிகளை நாங்கள் சேர்த்து கொள்வோம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மோசமான ஆட்சி போதை பொருள் நடமாட்டத்திற்கு அளவே இல்லை. காவல்துறைக்கு அவர்கள் அச்சபடவில்லை. சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது என்றார். உடன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜி ஆகியோர் இருந்தனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
இப்பவாது யோசிங்க எடப்பாடி.. அதிமுக தொண்டர்களின் பல்ஸை பிடித்த ஆதவ் அர்ஜுனா -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர்












Click it and Unblock the Notifications