அன்புமணிக்கு அமித் ஷா அனுப்பிய மெசேஜ்.. "வராதீங்க".. உடனே அதிமுக தலைகளுக்கு போன கால்.. என்னாச்சு?
சென்னை: நேற்று முதல்நாள் பிற்பகல் பாஜக தலைமையில் அன்புமணிக்கு போன் வந்துள்ளது, இதில் பேசிய விஷயங்களே பாஜக - பாமக கூட்டணிக்கு காரணமாக அமைந்தது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பாஜக - பாமக கூட்டணி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு உறுதியாகி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திக்கும் என்று பாமக அறிவித்துள்ளது.

நேற்று முதல்நாள் காலையில் இருந்து மாலை பாமக - அதிமுக கூட்டணியே உறுதியாகும் என்று தகவல்கள் வந்தன. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ஆஃபர் ஒன்றை பாமகவிற்கு கொடுத்ததாக செய்திகள் வந்தார்.
இரண்டு நாட்களாக அதிமுக சார்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது வைக்கும் கூட்டணியை 2026லும் தொடரலாம். நாம் சேர்ந்தால் சில இடங்களில் 2ம் இடம் அல்ல வெற்றிபெறும் வாய்ப்பு கூட உள்ளது. பாஜக கூட்டணியில் அதற்கு வாய்ப்பு இல்லை. 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி நல்ல பலன் தரும் என கட்சிகாரர்கள் சொல்கிறார்கள் என சொல்லி அதிமுக உடன் கூட்டணி வைக்க பாமக முடிவு செய்துள்ளதாம் . 8 லோக்சபா சீட், + தேர்தல் நிதி என்று அதிமுக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதை முதலில் பாமக ஏற்றுக்கொண்டு கூட்டணியை இறுதி செய்வதாக இருந்தது. ஆனால் கடைசி நொடியில் பாமக - பாஜக கூட்டணி கையெழுத்தானது. நேற்று முதல்நாள் பிற்பகல் பாஜக தலைமையில் அன்புமணிக்கு போன் வந்துள்ளது, இதில் பேசிய விஷயங்களே பாஜக - பாமக கூட்டணிக்கு காரணமாக அமைந்தது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பேட்டி: இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பாமக உயர்மட்ட குழு கூடி.. ராமதாஸ் கூட்டணி பற்றி முடிவு எடுக்கும் முழு உரிமையை கட்சி வழங்கிவிட்டது. பாஜக, அதிமுக இரண்டுமே ராஜ்ய சபா கொடுக்கவில்லை. பாஜக 10 சீட் தருவதாக கூறியது. அதிமுக 8 சீட் தருவதாக கூறியது. அடுத்த முறை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது. அதனால் பாமக இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆனால் வன்னியர்களே பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள். 10.5 சதவிகித ஒதுக்கீடு காரணமாக வன்னியர்கள் அதிமுகவை விரும்புகின்றனர். அதிமுக ஒரு நல்ல சான்சாக இருக்கும் என்று வன்னியர்கள் நினைத்தனர். அவர்கள் ஏற்கனவே சட்டசபை தேர்தலில் சேலம், தருமபுரியில் அதிக இடங்களை அதிமுக கூட்டணிக்கு கொடுத்தனர். ஆனால் பாமக தலைமை பாஜகவுடன் சென்றுள்ளது.
நேற்று முதல்நாள் பிற்பகல் பாஜக தலைமையில் இருந்து போன் வந்துள்ளது. அன்புமணிக்கு போன் வந்துள்ளது . எங்களை இந்த நேரத்தில் கைவிட வேண்டாம். சட்டசபை தேர்தலில் நீங்கள் முடிவை மாற்றலாம். ஆனால் இந்திய தேர்தலில் எங்களுடன் இருங்கள் என்று நட்டா போனில் கூறி இருக்கிறாராம். அமித் ஷாவிடம் இருந்தும் கூட மெசேஜ் வந்துள்ளதாம்.
இதனால்தான் அன்புமணி கூட்டணியை மாற்றி உள்ளாராம். அதிமுக உடன் கூட்டணியை இறுதி செய்யும் கடைசி நொடி வரை வந்துவிட்டனர். அதிமுக தலைவர்கள் தைலாபுரம் வர வேண்டிய சூழல் இருந்தது. அப்போது அன்புமணி போன் செய்து நீங்கள் வர வேண்டாம் என்று அதிமுக தலைவர்களிடம் சொல்லிவிட்டார். இது அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications