அண்ணா சமஸ்கிருதத்திற்கு பதிலடியாக செந்தமிழை எப்படி கொண்டு வந்தார்.. திராவிடம் செய்தது என்ன?
சென்னை: தமிழையும் அண்ணாவையும் பிரிக்க முடியாது. தமிழர்கள் தங்களை ஒரு நாடாக, மக்களாக, பொதுமக்கள் திரளாக, ஒரு அரசியல் பொருளாதாரமாக, பெரிய அளவில் இவை அனைத்துமாக நினைக்க தொடங்கினார்கள். அப்படி அவர்கள் புதிதாக ஒன்றை செய்ய முயன்ற போது, அவர்களது பழைய விஷயங்கள் மேலெழுந்து வந்தன என்று .. 'தமிழ் மேடைப் பேச்சும் திராவிட அழகியலும்' என்ற நூலில் குறிப்பிடுகிறார் யேல் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் பெர்னார்ட் பேட்.
தமிழையும் அண்ணாவையும் பிரிக்க முடியாது. தற்கால தமிழ் மொழியின் மீது பேரறிஞர் அண்ணா செலுத்திய தாக்கம் அளப்பரியது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல என்ற சொற்றொடரை பலரும் பல மொழி என கருதியிருப்பார்கள். ஆனால் அண்ணாவின் மொழியாகும். உறுப்பினர் என்ற சொல், தமிழுக்கு அண்ணாவின் கொடை என்று சொல்கிறார்கள். ஏனெனில் தமிழில் ஏராளமான சமஸ்கிருத சொற்கள் கலந்து இருந்தன.

மணிப்பிரவாளம் என்று சொல்லக்கூடிய கலப்பு மொழியாகி விட்டிருந்த நிலையில், சமஸ்கிருத சொற்களை நீக்க முயன்றது, தனித்தமிழ் இயக்கம். மறைமலை அடிகள், பருதிமார் கலைஞர், தேவனேய பாவானர் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட அந்த இயக்கம் பெரிதும் புலவர்களின் இயக்கமாகவே இருந்தது. ஆனால் தமிழ் சமூகத்தின் புதிய தேவைகளுக்கு ஏற்ப செந்தமிழ் சொற்களை படைத்து, அதனை மேடையில் பேசி, அதனை பேச்சு மொழியாக்கியது சாதனை என்றால், அந்த சாதனை பயணத்தை தொடங்கியவர் அண்ணா.
பஞ்சாயத்து சமிதி என்ற சொல்ல ஊராட்சி ஒன்றியம் ஆனதும், காரியக் கமிட்டி செயற்குழு ஆனதும், மந்திரி என்ற சொல் அமைச்சரானதும், அக்கிரசேனார் அவைத்தலைவர் ஆனதும், சட்டசபை சட்டப்பேரவை ஆனதும், அண்ணாதுரை செய்த அசாத்தியமான விஷயங்கள் ஆகும். அண்ணா அரசியல் வானில் அண்ணா கொண்டு வந்தது பெரும் பேச்சு மாற்றம் அல்ல.. அது மிகப்பெரிய அரசியல் விளைவை நோக்கிய பயணம். அதன் திசையோடு உடன்பட்டவர்களும், மாறுபட்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறுகதை.
20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் மேடைப்பேச்சு, பழங்கால மேடைப்பேச்சை போல் தொடங்கியது.. அண்ணா தனது மேடைப் பேச்சால் தமிழ் அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறார். அவரது பேச்சுகள் உணர்ச்சிபூர்வமாக இல்லாமல், அறிவுபூர்வமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் இருந்தது. அண்ணா தனது பேச்சில், நவீன அறிவியல் கருத்துக்களையும், தமிழின் சங்க இலக்கியங்களையும் கலந்து பேசியபடி இருந்தார். இது பாமர மக்களையும் சிந்திக்கத் தூண்டியது.
பழங்கால சொற்களை, உவமைகளை பயன்படுத்தத் தொடங்கினார். இவை எல்லாம் நவீன ஜனநாயக அரசியலை பேசவே பயன்பட்டன. வேறு சொல்லில் கூறுவது என்றால் , தமிழர்கள் தங்களை ஒரு நாடாக, மக்களாக, பொதுமக்கள் திரளாக, ஒரு அரசியல் பொருளாதாரமாக, பெரிய அளவில் இவை அனைத்துமாக நினைக்க தொடங்கினார்கள். அப்படி அவர்கள் புதிதாக ஒன்றை செய்ய முயன்ற போது, அவர்களது பழைய விஷயங்கள் மேலெழுந்து வந்தன என்று .. 'தமிழ் மேடைப் பேச்சும் திராவிட அழகியலும்' என்ற நூலில் குறிப்பிடுகிறார். யேல் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் பெர்னார்ட் பேட்.
பேராசிரியர் பெர்னார்ட் பேட் இதுபற்றி கூறும் போது, மேடைப்பேச்சில் செந்தமிழை கொண்டு வந்த அண்ணா, அதனை பழமையை நோக்கி கொண்டு செல்வதற்காக செய்யவில்லை.. நவீன ஜனநாயக அரசியலுக்காக இதனை செய்தார். புதிதாக ஒரு சமூகமாக, நாடாக, அமைப்பாக தங்களை நினைக்கத் தொடங்கிய நிலையில், அந்த அரசிலைய மீட்டெடுப்பதற்காகவே, பழைய மொழியை தேர்வு செய்தனர் என்றார். பழமையான செம்மொழியை மீட்டெடுத்து, அதனை புதிய அரசியலுக்கு பயன்படுத்தியது அண்ணா தான். சென்னை மாகாணம் என்று இருந்த தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அண்ணா தான்..
அண்ணா, "திராவிட நாடு" மற்றும் "காஞ்சி" போன்ற பத்திரிகைகளைத் தொடங்கி, தனது அரசியல் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு சென்றார். அண்ணா பல புதினங்கள், நாடகங்கள் மற்றும் சிறுகதைகளை எழுதி இருக்கிறார், அவற்றில் "சிதம்பர ரகசியம்", "ரங்கோன் ராதா" போன்ற படைப்புகள் புகழ் பெற்றவை ஆகும். அண்ணா, தமிழ் வளர்ச்சித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற மொழியாக மாற்ற முயற்சி செய்தார். அண்ணாவின் பங்களிப்பு, தமிழ் மொழியின் பயன்பாட்டை அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத் தளங்களில் மேம்படுத்தி, நவீன தமிழுக்கு ஒரு புதிய திசையை அமைத்திருக்கிறது. இன்றைக்கு பிற மொழி கலக்காமல் எழுதவும் பேசவும் பலரால் முடிகிறது என்றால் அண்ணாவின் பங்கு முக்கியமானது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications