இதான் இனி நடக்க போகுது.. யாருமே தடுக்க முடியாது.. அன்றே கணித்த பாட்டி "பாபா வங்கா".. பகீர் பின்னணி
பாபா வங்கா, முன்கூட்டியே ரஷ்ய அதிபர் பற்றி கணித்து தெரிவித்துள்ளார்
சென்னை: கண்பார்வையற்ற பாபா வங்கா பாட்டி ஏற்கனவே கணித்து சொன்ன விஷயம் ஒன்று உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.. அது வெட்டுக்கிளி பற்றியதுதான்,
Recommended Video
பாபா வங்கா பல்கேரியாவை சேர்ந்தவர்.. கண்பார்வையற்றவரும் கூட.. 85ம் வயதில் 1996-ம் வருடம் இறந்துவிட்டார்.. பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போதுவரை மதிக்கப்படுகிறார்.
12 வயதில் பார்வையை இழந்தவுடனேயே உலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல துவங்கிவிட்டார்.

கணிப்புகள்
கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் பலித்தும் உள்ளது.. அவைகளில் பல ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்தும் வருகின்றன. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல் நடக்கும் என்று இவர் ஏற்கனவே சொல்லி இருந்த நிலையில், கடந்த 2011-ல் செப்டம்பரில் அதுபோலவே நடந்துவிட்டது..

ஒபாமா
அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர்தான் பதவியேற்பார் என்று சொல்லி இருந்தார்.. அப்படியேதான் ஒபாமா வந்து பதவியை ஏற்றார்.. 2016-ல் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார்.. இவைகளும் நடந்தது.

தண்ணீர் பஞ்சம்
உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும், அதிகப்படியான டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையே குழப்பம் ஏற்படும் என பல விஷயங்களையும் கணித்து விட்டு சென்றுள்ளார்.. அதனால்தான், ஒவ்வொரு வருடமும் முடியும்போதும், புதுவருடம் தொடங்கும்போதும் இந்த மர்ம பெண்ணின் வார்த்தைகள் மிக கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.

உக்ரைன் போர்
அதேபோல, 2021-ல் இந்த உலகம் சில பேரழிவுகளை என்றார்.. அதன்படியே கொரோனா தொற்று பரவல் தாக்கிவிட்டது.. இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். இப்போது ரஷ்யா உக்ரைன் மீது பயங்கர தாக்குதலை நடத்தியதை அடுத்து, பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று மீண்டும் வைரலாகியுள்ளது.

வைரல் செய்திகள்
பாபா வங்கா, எழுத்தாளர் வாலண்டைன் சிடோரோவிடம் கூறியதாவது: "அனைத்தும் கரைந்துவிடும், பனிக்கட்டி போல, ஒன்று மட்டும் தீண்டப்படாமல் இருக்கும்.. அதுதான் விளாடிமிரின் மகிமை.. ரஷ்யாவின் மகிமை.. அதனை (ரஷ்யாவை) யாராலும் தடுக்க முடியாது.. ரஷ்யா உலகின் அதிபதி ஆகிவிடும் என்று கூறியிருந்தார். இவரது இந்த கணிப்பு தான் இப்போது வைரலாகி வருகிறது. அத்துடன்,1999 டிசம்பரில் ரஷ்யாவின் தற்காலிக ஜனாதிபதியாக புதின் பதவியேற்ற பிறகு, அவர் ரஷ்ய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி உலக விவகாரங்களில் முக்கிய பங்கு வகித்தது நினைவு கூறப்பட்டு வருகிறது.

ஏலியன்கள்
இப்போது மேலும் ஒரு பீதி மக்களுக்கு கிளம்பி உள்ளது.. 2022ல் பூமிக்கு ஏலியன்கள் வரப்போகிறார்கள்.. பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்து இருக்கிறாராம்.. அதிலும் உலகை அச்சுறுத்த போகும் இன்னொரு விஷயம் குறித்தும் பாபா வங்கா கணிப்பில் தெரிவித்துள்ளார்.

வெட்டுக்கிளிகள்
இந்த 2022ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் ஏற்ககனவே எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2022ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று தெரிவித்திருக்கிறார்.. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் மீண்டும் தாக்கக்கூடும் என்றும், அதனால் பயிர்கள் எல்லாம் அழிந்து பஞ்சம் தாக்க போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.. ஒவ்வொன்றும் பலித்து வருவதால், இதை நினைத்துதான் மக்கள் கலங்கி போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications