காயம்.. கோபம்.. அவமானம்.. நொறுங்கிய கே. எல் ராகுலை உருமாற்றிய "பெங்களூர் நாட்கள்".. என்ன நடந்தது?
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியாவின் மிடில் ஆர்டர் வீரர் கே. எல் ராகுல் ஆடிய விதம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
நேற்று இக்கட்டான நிலையில் களமிறங்கிய கே எல் ராகுல் பவுண்டரி.. சிங்கிள் என்று ரொட்டேட் செய்தார். முழு இன்னிங்ஸ் கீப்பிங் செய்துவிட்டு.. அதன்பின் பேட்டிங்கும் வந்து ஆடினார். இவரின் 97 ரன்கள் கண்டிப்பாக 100க்கு சமம் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக இருந்தது. முக்கியமாக மிடில் ஆர்டரில் இவர் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தியது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடைசி வரை இருந்து மேட்சை முடித்துக்கொடுத்துவிட்டு சென்றார் கே எல் ராகுல். முக்கியமாக அவர் ஆஸ்திரேலியா பாஸ்ட் பவுலர்களை மிக சிறப்பாக எதிர்கொண்டார்.
( ரொட்டேட் வியூகம்.. திணறிய ஆஸ்திரேலியா.. 3 விக்கெட்டை பட்டென இழந்தும்.. இந்தியா வென்றது எப்படி? )
இந்த தொடரிலும், இதற்கு முன் ஆசிய கோப்பை தொடரிலும்.. கே. எல் ராகுல் சிறப்பாக ஆடி இருந்தாலும்.. அதற்கு முன் ஒரு வருடம் அவரின் ஆட்டம் மிக மோசமாக இருந்தது. முக்கியமாக காயத்தில் இருந்து முழுமையாக கே. எல் ராகுல் விடுபடாமல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்திய அணியில் எந்த பார்மட்டிலும் சரியாக ஆடாத கே. எல் ராகுலை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு வந்தன.

இவரை இனியும் ஓப்பனிங் இறக்க கூடாது. போதுமான அளவு வாய்ப்பு இவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்று அவருக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அணியில் தொடர்ந்து நன்றாக ஆடி வந்த தவான் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் 2018 ஆசிய கோப்பை, 2017 சாம்பியன் கோப்பை, 2013 சாம்பியன் கோப்பை, 2015 உலகக் கோப்பை 50 ஓவர் தொடர் என்று வரிசையாக அதிக ரன்களை எடுத்த டாப் ஸ்கோர் வீரர் ஆவார்.
ஆனால் அவர் சேர்க்கப்படவில்லை. டி 20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்து பார்ம் இல்லாமல் இருந்த கே. எல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்டது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. பயிற்சியாளர் ராகுல் கர்நாடகா.. இவரும் கர்நாடகா என்பதால் இவருக்கு இப்படி கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
பெங்களூர் நாட்கள்: இப்படி இவரின் பார்ம் மோசமாக இருந்த போதுதான் கூடுதலாக காலில் காயமும் ஏற்பட்டது. இரண்டு முறை அவருக்கு காயம் ஏற்பட பெங்களூர் கிரிக்கெட் அகாடமியில் இவர் பயிற்சி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த பெங்களூர் நாட்கள்தான் இவரை மொத்தமாக மாற்றியது.
(பிரஷரை தாங்க மாட்டீங்களா? இளம் மிடில் ஆர்டர் வீரரை டேக் செய்து.. விளாசிய யுவராஜ் சிங்.. கிளாஸ்!)
பீஸ்ட் மோடிற்கு இவர் மாறுவதற்கு காரணமாக அமைந்தது அதுதான். அங்கு அவரின் காயத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டது . போதிய ஓய்வு அளிக்கப்பட்டது. அதை எல்லாம் தாண்டி அவருக்கு மன ரீதியாக நிறைய பயிற்சி அளிக்கப்பட்டது. மன ரீதியாக உடைந்து போய் இருந்த அவருக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி அதிகாரிகள் சிறப்பு ஆலோசனை பயிற்சிகளை வழங்கினர்.
அந்த முறையான பயிற்சிகள்.. மன ரீதியிலான ஆலோசனைகள்தான் நொறுங்கி இருந்த கே எல் ராகுலை மீண்டும் பார்மிற்கு திரும்ப வைக்க காரணமாக இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications