Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரஷரை தாங்க மாட்டீங்களா? இளம் மிடில் ஆர்டர் வீரரை டேக் செய்து.. விளாசிய யுவராஜ் சிங்.. கிளாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் ஒருவர் ஆடிய விதத்தை இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நேற்று திரில் வெற்றி பெற்றது. இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 199க்கு ஆல் அவுட ஆகி உள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. ஜடேஜாதான் இன்று ஆட்டத்தை மாற்றினார். இன்று ஜடேஜா மட்டும் 3 விக்கெட், குல்தீப், பும்ரா 2 விக்கெட் , சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர்.இந்த தரமான பவுலிங் இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது.

அதன்பின் இந்தியா எளிதாக ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் 3 விக்கெட்டுகளை இந்தியா 2 ரன்களுக்கு இழந்தது. இஷான் கிஷன், ரோஹித் சர்மா அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். அதன்பின் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயரும் டக் அவுட் ஆனார். ஸ்டார்க் ஒரு விக்கெட், ஹேசல்வுட் இரண்டு விக்கெட் எடுத்து இந்தியாவிற்கு பிரஷர் கொடுத்தனர். இதையடுத்து கோலி, கே எல் ராகுல் மட்டும் அவ்வப்போது பவுண்டரி அடித்து பொறுப்பாக ஆடி அணியை வெற்றியின் பக்கம் கொண்டு சென்றனர்.

Yuvraj Singh thrashed a middle-order player of India for failing against Australia in the World Cup 2023

.
விமர்சனம்: இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் ஒருவர் ஆடிய விதத்தை இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங் விமர்சனம் செய்துள்ளார்.

( அது மட்டும் நடக்கலைனா.. மொத்தமாக காலி ஆகிருப்போம்.. இந்தியா ஆஸ்திரேலியாவை வெல்ல காரணமான 5 விஷயங்கள்! )

அவர் தனது விமர்சனத்தில், 4ம் இடத்தில் விளையாடும் வீரர் பிரஷரை தாங்கிக்கொள்ளும் வீரராக இருக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் நன்றாக யோசிக்க வேண்டும். இந்தியா மீண்டும் தனது இன்னிங்க்ஸை கட்டிக்காக்க நினைக்கும் போது இப்படி அவுட் ஆக கூடாது.

கே. எல் ராகுல் ஏன் 4ம் இடத்தில் ஆடவில்லை என்பது இன்னும் எனக்கு புரியவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு எதிராக இதே இடத்தில் சதம் அடித்தார். அப்போதும் கூட அவரால் இந்த இடத்தில் ஆட முடியவில்லை. விராட் கோலி விக்கெட்டை ஆஸ்திரேலியா விட்டது அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது. ஆஸ்திரேலியாவிற்கு இது பெரிய சரிவாக மாறிவிட்டது.

கிங்கின் விக்கெட்டை மிஸ் செய்யாதீர்கள். ஏனென்றால் அவர் மொத்த ஆட்டத்தையும் தூக்கி சாப்பிடும் திறன் கொண்டவர் என்று யுவராஜ் சிங் விமர்சனம் செய்துள்ளார், என்று கூறியுள்ளார்.

( ரொட்டேட் வியூகம்.. திணறிய ஆஸ்திரேலியா.. 3 விக்கெட்டை பட்டென இழந்தும்.. இந்தியா வென்றது எப்படி? )

யுவராஜ் சிங்: 2011 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றிபெற 4ம் இடத்தில் யுவராஜ் சிங் ஆடியது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அவரின் மிடில் ஆர்டர் பேட்டிங்.. முக்கியமாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஆடிய விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

அவருக்கு பின் மிடில் ஆர்டரில் யாரும் அவர் அளவிற்கு சிறப்பாக ஆடவில்லை. இந்த நிலையில்தான் நேற்று ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை யுவராஜ் சிங் விமர்சனம் செய்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் தொடக்கத்திலேயே சுருண்டும் மிடில் ஆர்டருக்கு பதிலாக ஒன் டவுன் வீரர் கோலி அதை சரியாக தூக்கி நிறுத்தினார். மிகவும் நிதானமாக ரொட்டேட் செய்தார். அதிகமாக ரன் அடிக்க வேண்டும் என்று நினைக்காமல் பேட்டிங்கில் ரொட்டேட் மட்டும் செய்தார். தேவையான இடங்களில் பவுண்டரி அடித்ததன் மூலம் 85 ரன்கள் எடுத்தார். அவர் மட்டும் ரொட்டேட் செய்யவில்லை என்றால் நேற்று டீம் காலி ஆகி இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+