அது மட்டும் நடக்கலைனா.. மொத்தமாக காலி ஆகிருப்போம்.. இந்தியா ஆஸ்திரேலியாவை வெல்ல காரணமான 5 விஷயங்கள்!
சென்னை: உலகப் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா நேற்று அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த சீஸனின் முதல் வெற்றியை நேற்று பதிவு செய்ததன் மூலம் உலகக் கோப்பை 20 23 தொடரில் மாஸாக இந்தியா களமிறங்கி உள்ளது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.
2023 உலகக் கோப்பை முறையாக தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். தொடக்க ஆட்டமாக இந்தியாவின் மேட்ச் வைக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் நடக்க வேண்டும் என்பதற்காக முதல் 3 மேட்சுகள் இந்தியா ஆடவில்லை.

இந்த தொடரின் தொடக்க ஆட்டங்கள் சரியாக ஈர்க்காத நிலையில்..இந்தியாவின் மேட்ச் நேற்று நடந்ததால் தொடரே விறுவிறுப்பாகி உள்ளது. அதிலும் நேற்று மேட்ச் அதிக திரில்லாக சென்றது. காரணம் இது ஒரு லோ ஸ்கோரிங் திரில்லர் மேட்ச் ஆகும். ஆஸ்திரேலியா அடித்ததே 199 ரன்கள்தான். அந்த அளவிற்கு இந்தியாவின் பவுலிங் சிறப்பாக இருந்தது.
ஆனால் அதன்பின் இந்தியா பேட்டிங் இறங்கி.. தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. இருந்தாலும் கோலி கே எல் ராகுல் பேட்டிங் காரணமாக இந்தியா சிறப்பாக ஆடி.. சரிவில் இருந்து மீண்டு இந்த போட்டியில் வென்றது. இந்த மேட்சில் இந்தியா வெல்வதற்கு 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.
காரணம் 1 - இந்தியாவிடம் லெப்ட் ஹேண்ட் ஸ்பின் பவுலர் இருந்தது முக்கிய காரணம். அதிலும் ஜடேஜா நேற்று பிட்சை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். எல்லா பந்தையும் லைனில் போடாமல்.. தேவையான பந்துகளை லைனில் வீசினார். அதிலும் இதை குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வீசினார். இவர் வேகமாக பந்துகளை ஸ்பின் செய்ததால் அவ்வளவு எளிதாக எதிரணி வீரர்களால் இவரை கணிக்க முடியவில்லை.. இதன் விளைவாகவே இவர் 3 விக்கெட்டுகளை.. ஸ்மித், லபுசேன், அலெக்ஸ் கேரி விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.
( ரொட்டேட் வியூகம்.. திணறிய ஆஸ்திரேலியா.. 3 விக்கெட்டை பட்டென இழந்தும்.. இந்தியா வென்றது எப்படி? )
காரணம் 2 - இந்தியாவின் பீல்டிங், பீல்டிங் செட்டப் நேற்று மிக சிறப்பாக இருந்தது. முக்கியமாக சிராஜ், இஷான் கிஷான் பீல்டிங் சிறப்பாக அமைந்தது. நேற்று செய்யப்பட்ட பீல்டிங் மட்டுமே 10- 15 ரன்கள் குறைவாக செல்ல காரணமாக அமைந்தது.
காரணம் 3 - இந்தியாவின் பவுலிங் ரொட்டேஷன் மிக அருமையாக இருந்தது. சீக்கிரமே குல்தீப், அஸ்வின் கொண்டு வரப்பட்டது. சிராஜுக்கு ஓவரை குறைவாக கொடுத்து டெத் ஓவர்களில் பயன்படுத்தியது.. இடையில் மேக்ஸ்வெல் இறங்கியதும் அவர் ஸ்பின் பவுலிங்கில் அடிப்பார் என்று ஒரு எண்டில் பும்ராவை பவுலிங் போட வைத்தது என்று இந்தியாவின் பவுலிங் ரொட்டேஷன் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது .

( ஆஸ்திரேலியா செய்த "சின்ன" தவறு.. கப்பென பிடித்துக்கொண்ட இந்தியா.. சரசரவென விக்கெட் விழுந்தது எப்படி? )
காரணம் 4 - இந்திய அணியின் பேட்டிங் தொடக்கத்திலேயே சுருண்டும் கோலி அதை சரியாக தூக்கி நிறுத்தினார். மிகவும் நிதானமாக ரொட்டேட் செய்தார். அதிகமாக ரன் அடிக்க வேண்டும் என்று நினைக்காமல் பேட்டிங்கில் ரொட்டேட் மட்டும் செய்தார். தேவையான இடங்களில் பவுண்டரி அடித்ததன் மூலம் 85 ரன்கள் எடுத்தார். அவர் மட்டும் ரொட்டேட் செய்யவில்லை என்றால் நேற்று டீம் காலி ஆகி இருக்கும்.
காரணம் 5 - இன்னொரு பக்கம் கே எல் ராகுல் பவுண்டரி.. சிங்கிள் என்று ரொட்டேட் செய்தார். முழு இன்னிங்ஸ் கீப்பிங் செய்துவிட்டு.. அதன்பின் பேட்டிங்கும் வந்து ஆடினார். இவரின் 97 ரன்கள் கண்டிப்பாக 100க்கு சமம் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக இருந்தது. முக்கியமாக மிடில் ஆர்டரில் இவர் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தியது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications