ரொட்டேட் வியூகம்.. திணறிய ஆஸ்திரேலியா.. 3 விக்கெட்டை பட்டென இழந்தும்.. இந்தியா வென்றது எப்படி?
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடக்கத்திலேயே 3 விக்கெட்டை இழந்தும் கூட இந்தியா சிறப்பான பேட்டிங் காரணமாக உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியை வென்றுள்ளது.
2023 உலகக் கோப்பை முறையாக தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த தொடரின் தொடக்க ஆட்டங்கள் சரியாக ஈர்க்காத நிலையில்..இந்தியாவின் மேட்ச் இன்று நடந்ததால் தொடரே விறுவிறுப்பாகி உள்ளது. பொதுவாகவே லோ ஸ்கோர் போட்டிகளில் திரில்லாக இருக்கும். அதிலும் இரண்டு அணிகளும் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தால் அதிக விறுவிறுப்பு இருக்கும்.
விறுவிறுப்பு: இன்று ஆடிய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன் ), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (கீப்பர்), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன் ), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

பேட்டிங்: இன்று முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா 199க்கு ஆல் அவுட ஆகி உள்ளது. இந்தியாவின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. ஜடேஜாதான் இன்று ஆட்டத்தை மாற்றினார். இந்தியாவின் ஸ்பின் பவுலிங்கில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினார்கள்.
( சிரிச்சதுதான் கஷ்டமா இருக்கு! ஏ ஏய்! ஒரு நிமிடம் அப்படியே எழுந்து நின்ற இஷான் கிஷன்! அலற விட்ட கோலி )
ஆஸ்திரேலியர்கள் ஹெல்மெட் அணியாதது அணியையே சாய்த்துள்ளது ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஹெல்மெட் அணியாமல் ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்டதால் விக்கெட்டுகளை இழந்து உள்ளனர். முக்கியமாக ஜடேஜா மட்டும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடுமையாக பிரஷர் கொடுத்தார். அதிலும் அவர் மிக வேகமாக பவுலிங் செய்ததால், அவரின் டர்னிங்கை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

பவுலிங் விக்கெட்: இன்று ஜடேஜா மட்டும் 3 விக்கெட், குல்தீப், பும்ரா 2 விக்கெட் , சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர்.இந்த தரமான பவுலிங் இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது. இந்த நிலையில்தான் அடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து உள்ளது.
இந்திய பேட்டிங்: ஆனால் பவுலிங் செய்த பின் பேட்டிங் இறங்கிய இந்திய அணி வரிசையாக 3 விக்கெட்டுகளை இழந்து உள்ளது. இஷான் கிஷன், ரோஹித் சர்மா அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். அதன்பின் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயரும் டக் அவுட் ஆனார்.
( ஆஸ்திரேலியா செய்த "சின்ன" தவறு.. கப்பென பிடித்துக்கொண்ட இந்தியா.. சரசரவென விக்கெட் விழுந்தது எப்படி? )
ஸ்டார்க் ஒரு விக்கெட், ஹேசல்வுட் இரண்டு விக்கெட் எடுத்து இந்தியாவிற்கு பிரஷர் கொடுத்தனர். இதையடுத்து கோலி, கே எல் ராகுல் மட்டும் அவ்வப்போது பவுண்டரி அடித்தனர். பேட்டிங்கில் பெரும்பாலும் ரொட்டேட் செய்து இவர்கள் நிதானமாக ஆடினார்கள். தேவையான நேரங்களில் மட்டும் பவுண்டரி அடித்து சுதாரித்து ஆடினர்.

விக்கெட் விழுவதை நிறுத்திய பின் வேகம் எடுத்த கோலி பின்னர் பவுண்டரி மழையால் அதிரடி காட் தொடங்கினார். அதிரடியாக ஆடி வந்த அவர் செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 116 பந்தில் 6 பவுண்டரி அடித்து 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இன்னொரு பக்கம் கே. எல் ராகுலும் நிதானமாக ஆடி 97 ரன்கள் எடுத்தார். அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்த பின் அதிரடியாக ஆடி பார்மிற்கு திரும்பி உள்ளார்.
இதன் மூலம் ஓவரில் எளிதாக இந்திய அணி 200 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications