அமோகம்.. திடீரென "பெயரை மாற்றிய" சசிகலா.. இங்க பார்த்தா அதிமுகவில் அடிதடி.. அப்போ சக்ஸஸ்தான்?
சென்னை: அதிமுகவில் நடக்கும் மோதல்கள், ஒற்றை தலைமை விவாதங்கள் காரணமாக சசிகலா கொஞ்சம் குஷியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கூட்டம் நடக்கும் வானகரத்தில் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
சிறப்பு அழைப்பாளர்கள் இன்றி, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடிதம்
இது தொடர்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார். அதில், ஒற்றை தலைமை குறித்து தேவையின்றி பேச கூடாது. அந்த கருத்துக்களால் நிர்வாகிகள் பலர் கொதித்து போய் உள்ளனர்.கட்சிக்குள் விரிசலை இது ஏற்படுத்தும். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும். சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம். இதை பற்றி கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நாம் இருவரும் இணைந்து முடிவு எடுக்கலாம் என்று ஓ பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா ஹாப்பி
இந்த நிலையில் எப்படியாவது பொதுக்குழு தள்ளிப்போகும் என்ற நம்பிக்கையில் சசிகலா இருக்கிறாராம். அதோடு அதிமுகவில் இப்போது நடக்கும் விஷயங்களை பார்த்து கொஞ்சம் குஷியில் அவர் இருக்கிறாராம் . சமீபத்தில் சசிகலா சிறுதாவூர் பங்களாவில் ஆலோசனை செய்தார். ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் வெட்டவெளிச்சம் ஆன பின் அவர் இந்த ஆலோசனையை மேற்கொண்டார். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சசிகலா இந்த ஆலோசனையை செய்தார் என்கிறார்கள்.

சசிகலா
அதோடு சசிகலா தரப்பு ஓபிஎஸ் தரப்பிற்கு பல்வேறு மறைமுக சப்போர்ட்களை வழங்கி வருவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் கட்சியில் எழுச்சி பெற்றால்.. தனக்கு வாய்ப்பு கிடைக்கும். எடப்பாடி மீண்டும் வந்தால் அதிமுகவில் சேர்வதை மறந்துவிட வேண்டியதுதான் என்பதால் முடிந்த அளவு ஓபிஎஸ் தரப்பை வலுப்படுத்த சசிகலா காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதெல்லாம் உண்மை இல்லை என்று வெளிப்படையாக மறுத்துவிட்டார்.

குஷி
இந்த நிலையில் சசிகலா தனது பெயர் மாற்றத்திற்கு பின்புதான் இப்படி நல்ல விஷயங்கள் நடக்கிறது என்ற குஷியில் இருக்கிறாராம். ஆம் சசிகலா சத்தமே இன்றி தனது பெயரை மாற்றி உள்ளாராம். விகே சசிகலாவின்.. முன்னாடி இருந்த விகேவை தூக்கி விட்டாராம். சொந்த ஜோசியர் சொன்ன அறிவுரை காரணமாக சசிகலா என் என்று அவர் எழுதி வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய பெயரை பழக்கப்படுத்த அவர் தினமும் நோட் புக்கில் அதை எழுதி வருகிறாராம்.

அமோகம்
நீங்க பெயரை மாற்றுங்க.. எல்லாம் அமோகமாக மாறும் என்று ஜோசியர் சொன்னதை நம்பி அவர் பெயரை மாற்றி இருக்கிறார். இந்த நிலையில்தான் பெயரை மாற்றிய சில நாட்களில் அதிமுகவில் இப்படி ஒரு கலகம் ஏற்பட்டதை பார்த்து வியந்து போய் சசிகலா குஷியில் இருக்கிறாராம். தான் பெயரை மாற்றிய சில நாட்களில் ஓபிஎஸ் கிளர்ந்து எழுந்து அதிமுகவில் முஷ்டியை முறுக்கி வருவதால் சசிகலா தரப்பு.. மீண்டும் நாம் உள்ளே வரும் நேரம் வந்துவிட்டது என்று நம்பிக்கையில் இருக்கிறதாம்! இந்த நம்பிக்கை நிலைக்குமா.. பொய்த்து போகுமா என்பது வியாழக்கிழமை தெரிந்து விடும்!












Click it and Unblock the Notifications