நடிகை உட்பட 20 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்தது "இப்படி"தான்.. பணத்தை கொட்டினர்.. முகமது சையத் பகீர்
20 பெண்களை சீரழித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை: 20 க்கும் மேற்பட்ட பெண்களை, காதல் வலையில் வீழ்த்தி, அந்த பெண்களை சீரழித்த சையது முகமது கைதாகி உள்ள நிலையில், பல அதிர்ச்சிகரமான வாக்குமூலங்களை போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த முகமது சையத்து,
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு பெரிய அப்பார்ட்மென்ட்டில் குடியிருக்கிறார்.. பிகாம் படித்துள்ளார்... சின்ன வயது முதலே உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம்.
அதனால் ஜிம் பாடி ஆசையும், சிக்ஸ்பேக் மோகமும் சேர்ந்து கொண்டுவிட்டது.. ஒருகட்டத்தில் சினிமாவில் ஹீரோவாக ஆசைப்பட்டார்... அதனால் மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.. சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

மாடலிங் துறை
அதனால் முழுக்க முழுக்க மாடலிங் துறையிலேயே முழு கவனத்தை செலுத்தி வந்துள்ளார்.. அடிக்கடி ஃபேஷன் ஷோக்களையும் சொந்தமாகவே நடத்தி வந்துள்ளார்.. அப்போதுதான் ஏராளமான இளம்பெண்களின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது... இதற்கு நடுவில், லாக்டவுன் போட்டுவிடவும், வீட்டிலிருந்தபடியே, சோஷியல் மீடியாவில் ஃபேஷன் ஷோக்களை தொடர்ந்துள்ளார்.. இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக், ட்விட்டர்களிலேயே விழுந்து கிடந்துள்ளார்..

வீடியோக்கள்
அனைத்திலும் ஜிம் பாடி போட்டோக்கள், வீடியோக்களை அப்லோடு செய்தார். அதை பார்த்ததுமே, மாடலிங் துறையைச் சேர்ந்த பெண்கள் பலர், முகமது சையத்துடன் நட்பு வைக்க ஆரம்பித்தனர்.. சையதை பொறுத்தவரை வசதியான குடும்பம்.. எப்போதுமே சொகுசு காரில்தான் வெளியே வருவார்.. ஜிம்பாடியும், சொகுசு காரையும் பார்த்த சில பெண்கள், வலிய போய் சையத்துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளனர்.. அப்போதுதான் சையத் தன்னுடைய இன்னொரு பக்கத்தை காட்டினார்..

உல்லாச விடுதி
அந்த பெண்களை அழைத்து கொண்டு, பப்-களுக்கு அடிக்கடி சென்றுள்ளார்.. அவர்களுக்காக பணத்தை வாரி வாரி இறைத்து செலவு செய்துள்ளார்.. பிறகு மெல்ல காதலை வெளிப்படுத்துவார்.. இதுதான் எல்லா பெண்களிடமும் அவர் கையாண்ட டெக்னிக் ஆகும். இதையெல்லாம் நம்பி அந்த பெண்களும், சையத்துடன் ஜாலியாக இருந்துள்ளனர்.. அதை திருட்டுத்தனமாக வீடியோ எடத்து வைத்து கொள்வது சையத்தின் நம்பிக்கையாகும்.. இந்த விஷயத்தை வெளி உலகத்தக்கு கொண்டு வந்ததே ஒரு துணை நடிகைதான்..

மெசேஜ்கள்
அவரும் மாடலிங் துறையை சேர்ந்தவர்.. தி.நகரில் உள்ள பப்-க்கு வரும்படி இவருக்கு சையத் மெசேஜ் அனுப்பி உள்ளார்.. தவறுதலாக வேறு 2 பெண்களுக்கும் அந்த மெசேஜ் சென்றுவிட்டது.. இது தெரியாமல் மற்ற 2 பெண்களும் அந்த பப்-பில் வந்து காத்துள்ளனர். துணை நடிகையோடு பப்-புக்குள் நுழைந்த சையத்தை பார்த்ததும் 3 பெண்கள் உட்பட 4 பேருமே அதிர்ந்து விட்டனர். இப்படித்தான் சையத் சிக்கினார்..

வாக்குமூலம்
3 பெண்களும் சில தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து புகார் அளித்ததுடன், தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இப்போது போலீஸ் பிடியில் உள்ளார் சையத்.. ஆனால் அவர் அளித்த வாக்குமூலம்தான், பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. "நான் அழகாக இருப்பதால் என்னை நான் ரசிக்க ஆரம்பித்தேன்... ஸ்கூல் படிக்கும்போதிருந்தே ரீதியாக உறவு வைக்க ஆசைப்பட்டேன்... கல்லூரி படிக்கும்போது ஜிம்பாடி வந்துவிட்டது.. மாடலிங் துறையில் என் அழகை கண்டு பல பெண்கள் மயங்கினர்.

காம வலை
அவர்களுடன் நான் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்... என் காம வலையில் சிக்காத பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி படுக்கைக்கு அழைத்து வந்துவிடுவேன்.. ஒருவரும் தப்பவில்லை.. என் அழகில் மயங்கிய பெண்கள் எனக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார்கள். இதையே ஒரு பிஸினசாக செய்யலாம் என்று நினைத்து இறங்கினேன்... இந்த 5 வருடங்களில் எனக்கு நிறைய பணம், இன்பம் கிடைத்தது" என்று அதிர வைத்துள்ளார்.. தொடர் விசாரணை நடடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications