ஸ்டாலினின் ராஜதந்திரம்! பிடிவாதமாக இருந்த கமலை சம்மதிக்க வைத்தது எப்படி? பின்னாடி இவ்ளோ நடந்து இருக்கா
சென்னை:திமுக கூட்டணியில் இணைந்து 2 லோக்சபா சீட்டும், 1 ராஜ்யசபா சீட்டும் பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்திய கமலுக்கு, 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கி அவரை சம்மதிக்கவைத்துவிட்டது திமுக.
திமுகவின் இந்த ராஜதந்திரத்தை பலரும் ஆச்சரியத்துடன் பலரும் உற்று கவனிக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். ஒரு சீட்டுக்காகத்தான் அதுவும் ஒன்னரை வருசம் கழிச்சி வரும் ராஜ்யசபா சீட்டுக்காகவா கட்சியை ஆரம்பித்தோம் என மய்யத்தினர் ஆதங்கப்படுகிறார்கள்.

ராஜ்யசபா சீட்டுக்குள் கமலை அடைத்தது எப்படி ? என அறிவாலய வட்டாரங்களில் பேசியபோது, "ஒரு லோக்சபா சீட் தருகிறோம் ; உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என கமலிடம் ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டது. அதை அவர் ஏற்கவில்லை. தனிச் சின்னத்தில் தான் நிற்போம் என ஒற்றை காலில் நின்றார்.
கமலின் கோரிக்கை: இதில், தலைமைக்கு (திமுக) உடன்பாடில்லை. இதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'அப்படின்னா எந்த தொகுதியை எதிர்பார்க்கிறீர்கள்' என கமலிடமே கேட்கப்பட்டது. அவரோ, தென்சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்குங்கள் என கேட்டார். இதில் தென்சென்னை மட்டும் திமுகவிடமும், மற்றதெல்லாம் திமுக கூட்டணி கட்சிகளிடமும் சிட்டிங் தொகுதியாக இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்பது திமுகவின் நிலைப்பாடு.
அதனால், தென்சென்னை கிடையாது என கமலிடம் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. மற்ற தொகுதிகளை வைத்திருக்கும் கூட்டணிக் கட்சிகளிடம் திமுக பேசியது. யாரும் கமலுக்காக தொகுதியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. இதனை கமலிடம் தலைமை தெரிவித்ததுடன், கூட்டணி கட்சிகளிடம் நீங்கள் பேசிப்பாருங்கள் ; தொகுதிக் கிடைத்தால் எங்களுக்கு சந்தோசமே என்றும் சொல்லியிருக்கிறது.
கமல் யோசனை: கமலோ, கூட்டணிக் கட்சிகளிடம் எப்படி பேசுவது என தயங்கி அந்த முயற்சியை எடுக்கவில்லை. இந்த நிலையில், இதனை திமுகவிடம் தெரிவிக்க, திமுகவோ, 'லோக்சபா தான் முக்கியம்னா எங்க சின்னத்தில் நில்லுங்க ; நீங்க விரும்பும் தொகுதியை ஒதுக்கிடுறோம். இல்லைன்னா, தேனி தொகுதியை ( காங்கிரஸ் தோற்றத் தொகுதி ) ஒதுக்குகிறோம். ஓ.கே.வா? ' என கேட்க, கமல் அதை மறுத்துவிட்டார். இப்படியே இருந்த நிலையில்தான், தொகுதி கிடைக்காததால் ராஜ்யசபா ஓ.கே. வா ? அது உங்களின் தனித்தன்மையை பாதிக்காது என சென்டிமெண்ட்டாக எங்க தலைமை பேசியது. வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் கமல் " என்று திமுகவின் சாதுர்யத்தை விவரிக்கிறார்கள் அறிவாலயத்தார்
கூட்டணி: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. திமுகவின் அடுத்தடுத்த மூவ்கள் அதிமுகவை அதிர வைத்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்!
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
நேற்றுதான் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. அதற்கு முன் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் 2 நாட்களுக்கு முன்புதான் கையெழுத்து ஆனது.












Click it and Unblock the Notifications