ஸ்டாலின் நடத்திய ஒரு மீட்டிங்.. எடப்பாடி டூ விஜயபாஸ்கர்.. எகிறி அடித்த பிரஷர்.. ஆட்டம் ஸ்டார்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அழைப்பின் பெயரில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார். இந்த சந்திப்பு மூலம் அதிமுகவிற்கு பிரஷர் எகிறி உள்ளது.

தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக முதலமைச்சர் அவர்களோடு ஆலோசனை நடத்திட வேண்டுமென்று மாண்பமை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில், ஆளுநர் ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.

https://tamil.oneindia.com/news/washington/an-alert-over-loose-bolt-in-boeing-737-max-passenger-aircraft-dgca-closely-monitoring-the-situation-570587.html

ஆளுநர் ரவியின் அழைப்பினை யேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (30.12.2023) ஆளுநர் மாளிகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் . எஸ். இரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை

அமைச்சர்கள் மீட்டிங்: மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆகியோருடன் ஆளுநரைச் சந்தித்தார்.

ஆளுநருடனான இச்சந்திப்பின்போது, பல மாதங்களாக ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று முதலமைச்சர் ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

அதேபோன்று, தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும் ஆளுநர் , முதலமைச்சரை கேட்டுக் கொண்டார்.

ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திரு. கே.சி. வீரமணி மற்றும் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் வழங்க இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது. இதில் திரு. கே.சி. வீரமணி அவர்கள் தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தொடர்பான கோப்பினை

என்ன நடந்தது?: 6 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் உள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பும், நீண்ட காலமாக ஆளுநர் அவர்களிடம் நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல் அளித்து திரும்ப அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டுமென்றும், அப்போதுதான் மாநில மக்களின் நலனுக்கும், நிருவாகத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் அவர்களது செயல்பாடு அமையும் என்றும் முதலமைச்சர் அவர்கள், ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைத்தார்.

ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் ஆளுநர் அவர்களுக்கு நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாண்பமை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை ஆளுநர் அவர்கள் மனதில்கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்த்திட வேண்டுமென்றும் முதலமைச்சர், ஆளுநரை கேட்டுக் கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது, அரசின் சார்பாக மேற்படி கருத்துக்களை முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும், தலைமைச் செயலாளர் அவர்களும் விரிவாக எடுத்துக் கூறினர். முதலமைச்சர் அவர்கள் ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் அப்போது வழங்கினார். இக்கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின்மீதும் தனக்கு மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் , நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+