ஸ்டாலின் சொன்ன 2 மெகா பிளான்.. தேசிய அளவில் அடுத்தடுத்து கிடைத்த சப்போர்ட்.. உற்று பார்க்கும் பாஜக
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த இரண்டு முக்கியமான திட்டங்களுக்கு தேசிய அளவில் ஆதரவு கிடைக்க தொடங்கி உள்ளது.
பாஜகவை கடுமையாக மாநில அளவிலும், தேசிய அளவிலும் எதிர்த்து வரும் முதல்வர் ஸ்டாலின் தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதற்காக இரண்டு திட்டங்களை சமீபத்தில் அறிவித்தார். அவரின் இரண்டு அறிவிப்புகளும் தற்போது பல்வேறு மாநில முதல்வர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
எது என்னென்ன அறிவிப்புகள்?

அறிவிப்பு 1 : சமீபத்தில் குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.
சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களிடம் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கடிதம்: இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு இதே தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். பல்வேறு மாநில முதல்வர்கள் ஆளுநர் மீது கடுப்பில் உள்ள நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி உள்ளார்.
தெலுங்கானாவில் தமிழிசை - கேசிஆர் இடையிலும், கேரளாவில் ஆரிப் கான் - பினராயி இடையிலும் என்று டெல்லி, பீகார், மேற்கு வங்கம் என்று பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையில் மோதல் உள்ளது.
பாஜக ஆளாத மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநருக்கும் - அரசுக்கும் கடும் மோதல் உள்ளது.
தெலுங்கானாவில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் கே சந்திரசேகர ராவ் வழக்கு போடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டு உள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம் உடனே வென்ற நிலையில், ஆளுநரும் ரம்மி நீக்க மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.
அதேபோல் மற்ற மாநிலங்களிலும் ஆளுநரை வழிக்கு கொண்டு வர, பின்னர் தேசிய அளவில் ஆளுநரை எதிர்க்க வசதியாக இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி உள்ளார்.
ஸ்டாலினின் இந்த கோரிக்கையை சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டு இதே தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறினார்.
இதையடுத்து ஸ்டாலினின் இந்த கோரிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஏற்றுக்கொண்டு இதே தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறி உள்ளார். ஸ்டாலினின் இந்த கோரிக்கை தேசிய அளவில் தற்போது கவனம் பெற தொடங்கி உள்ளது.

இரண்டாவது அறிவிப்பு: சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகாலமாக வெற்றிபெற்றதற்கு ஒற்றுமை தான் காரணம். இந்த ஒற்றுமை தேசிய அளவில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் ஒற்றுமையான கூட்டணியை தேசிய அளவில் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலே வெற்றி நிச்சயம். அதுதான் இப்போது முக்கியம்.
காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைக்க கூடாது. அப்படியே அமைத்தாலும் அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்பதும் நடைமுறைக்கு சரியாக இருக்காது.
தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். 2024ல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சியமைக்க கூடாது என்பதே முக்கியம் என்று மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார்.

நிதிஷ் குமார் மூவ்: இந்த நிலையில் ஸ்டாலினின் பேச்சை வழிமொழியும் விதமாக தேசிய அளவில் கூட்டணி ஒன்று உருவாக்கிக்கொண்டு இருப்பதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறி உள்ளார்.
சமீபத்தில் டெல்லி சென்ற நிதிஷ் குமார், நான் டெல்லியில் தங்கியிருந்த போது பல எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தேன்... அனைவரும் ஒரே குரலில் பேசுகிறார்கள்.. கூட்டணிக்கான பேச்சுக்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. தேசிய அளவில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக கூட்டணி அமைக்க நாங்கள் பேசி வருகிறோம். பாஜக அல்லாத தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது... எதிர்காலத்திலும் பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறி உள்ளார்.
அதோடு அரவிந்த் கேஜரிவால் தேசிய கூட்டணிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். தேசிய அளவில் ஆளுநர்களுக்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த இரண்டு முக்கியமான திட்டங்களுக்கு தேசிய அளவில் ஆதரவு கிடைக்க தொடங்கி உள்ளது பாஜகவை திரும்பி பார்க்க வைத்து உள்ளது.
அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளை பாஜகவும் கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications