தொட்டாலே போச்சு.. சக்கர வியூகம் அமைத்த தோனி.. கண் கட்டி வித்தையால் குழம்பிய ஹைதராபாத்! என்ன நடந்தது?
சென்னை: ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று தோனி கேப்டன்சி செய்த விதம் மிக சிறப்பாக இருந்தது .
இன்று ஹைதராபாத் - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பவுலிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.
இதில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. முக்கியமாக டாப் ஆர்டரில் இறங்கிய அபிஷேக் சர்மா 34 ரன்களை 26 பந்தில் அடித்தார். இவரை தவிர டாப் டார் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஆடவில்லை.
13 பந்துகள் பிடித்த ஹாரி புரூக் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிப்பாதி 21 பந்துகள் பிடித்தாலும் , 1 சிக்ஸர் அடித்தாலும் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதேபோல் மார்கரெம் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். இன்று ஹென்ரிக் கிலேசன் 17 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆர்டர் இன்று குழப்பமாக இருந்தது. 6வது பேட்ஸ்மேனாக இன்று ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் இறக்கப்பட்டார்.
4 ஓவர் வீசிய ஜடேஜா மட்டும் இன்று 3 விக்கெட்டுகளை எடுத்தார். வெறும் 22 ரன்களை மட்டுமே இவர் கொடுத்தார்.

தோனி கேப்டன்சி
இன்று தோனி கேப்டன்சி மிக சிறப்பாக இருந்தது. கிட்டத்தட்ட சக்ர வியூகம் போல அவர் பீல்டிங் அமைத்து இருந்தார். தொடக்கத்தில் இருந்தே பைன் பகுதிகளில் அதிக அளவில் பீல்டர்களை நிறுத்தி இருந்தார்.
இதனால் பவுண்டரி செல்வது குறைந்தது. அதேபோல் ஹைதராபாத் வீரர்களால் ரொட்டேட் ஸ்டிரைக் செய்ய முடிய வில்லை. அதோடு தோனி ஒவ்வொரு வீரருக்கு சரியாக யூகித்து பீல்டிங் செட்டப் செய்தார்.
ஹென்ரிக் கெல்சன் மைதானத்தில் இருக்கும் வரை அவரால் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் கூட அடிக்க முடியாத அளவிற்கு சுற்றி சுற்றி பீல்டிங் வைத்து இருந்தார். அடிக்க முயன்றால் அவுட்தான் என்ற அளவிற்கு பீல்டிங் இருந்தது.
இதன் காரணமாக 12 வது ஓவரில் இருந்து 17வது ஓவர் வரை 5 ஓவர்கள் பவுண்டரி, சிக்ஸ் எதுவுமே செல்லவில்லை. அந்த அளவிற்கு ஹைதராபாத் அணிக்கு கண் கட்டி வித்தை காட்டினார்.
அவரின் பீல்டிங் செட்டப் காரணமாக குழம்பிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 134-7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பீல்டிங்
இன்று சிஎஸ்கே அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. வந்த எல்லா கேட்சையும் சரியாக பிடித்தனர்.
கடந்த பெங்களூருக்கு எதிரான போட்டியில் முக்கியமான சமயத்தில் சிஎஸ்கே வீரர்கள் அடுத்தடுத்து வீரர்களை கேட்சுகளை விட்டனர். முக்கியமாக டு பிளசிஸ் இரண்டு முறை கேட்ச் கொடுத்து அதை இரண்டு முறையும் மகேஷ் தீக்சனா மிஸ் செய்தார்.
அந்த மேட்சில் மட்டும் சிஎஸ்கே வீரர்கள் 4 முறை கேட்சை மிஸ் செய்தனர். முக்கியமான நேரங்களில் கேட்சை விடுவது சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பியது. நேற்று வந்த கேட்சுகளை சரியாக பிடித்து இருந்தாலே சிஎஸ்கே அணி முன்கூட்டியே வென்று இருக்கும்.
ஆனால் டு பிளசிஸ் உள்ளிட்ட வீரர்களின் கேட்சை மிஸ் செய்ததால் சிஎஸ்கே அணி கடைசி வரை ஆட்டத்தை இழுத்து சென்றது. தோனி உட்பட நேற்று பலரும் கேட்சை மிஸ் செய்தனர்.
எப்போதும் கோபம் அடையாத தோனியே நேற்று மைதானத்தில் மொயின் அலியை பார்த்து கோபம் அடையும் அளவிற்கு நிலைமை மோசமானது.
அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி மைதானத்திற்கு வரும் முன் முறையாக கேட்ச் பயிற்சி செய்துவிட்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படியே இன்று சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்தனர்.
இந்த சீசனில் சிஎஸ்கே ரெக்கார்ட் :
ஐபிஎல் 2023 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே அடுத்து புனேவிற்கு எதிராக நடந்த போட்டியில் வென்றது.
இதையடுத்து மும்பைக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது.
முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.
இப்படி வரிசையாக இரண்டு வெற்றிகளை பதிவு செய்த சிஎஸ்கே நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 175/8 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 52, படிக்கல் 38 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172-6 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தேவன் கான்வாய் 50 ரன்கள் எடுக்க கடைசியில் தோனி 32, ஜடேஜா 25 என்று அதிரடி காட்ட சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்து நடத்த பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வென்றது. சிஎஸ்கே பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சின்னசாமி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 226/6 ரன்கள் எடுத்தது
தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் மட்டும் 3 ரன்களுக்கு அவுட்டாக, இன்னொரு பக்கம் டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். 45 பந்தில் கான்வே 83 ரன்கள் ஒரு பக்கம் எடுத்தார்.
அதன்பின் இறங்கிய ஆர்சிபி அணி வரிசையாக விக்கெட்டுகளை இழக்க, கடைசி 2 பந்தில் 11 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி 2 ரன்கள் மட்டுமே அடித்து 218-8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications