நயினார் பணம்? தாம்பரம் ஸ்டேஷனில் சிக்கிய ரூ.4 கோடி! தேர்தல் ஆணையத்திற்கு போன ரகசிய "டிப்".. யாரது?
சென்னை: தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சரியாக ரூ.4 கோடியை பிடிக்க காரணம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டிப் ஆப்தான் என்கிறார்கள்.
இதை தொடர்ந்தே நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டல் மற்றும் உறவினர் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது, சென்னை சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் வீட்டில் பறக்கும் படை சோதனை செய்து வருகின்றனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முருகன் வீட்டில் சோதனை செய்யப்படுகிறது. உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டுவந்த ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பணம் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக, ஓட்டிற்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று வழக்கம் போல பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு தற்பொழுது பண மூட்டையுடன் மாட்டி கொண்டனர் பாஜகவினர். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக நான்கு கோடி பணத்தை எடுத்து சென்றோமென கைதானவர்கள் வாக்குமூலம் வெளியாகி உள்ளது. திமுக சார்பாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
என்ன நடந்தது?: தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சரியாக ரூ. 4 கோடியை பிடிக்க காரணம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டிப் ஆப்தான் என்கிறார்கள். தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் யாரோ இதை முறையாக புகாராக அளித்துள்ளனர்.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் வெளியாகி உள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர்.
கணக்கில் வராத இந்த பணத்தை எடுத்து சென்ற போது போலீஸ் சோதனையில் சிக்கியது.
என்ன நடந்தது?: சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பணம் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர்.
இந்த பணம் எந்தக் கட்சி சார்பாக, எந்த வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அதிகார்பூர்வமாக இதுவரை அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் விசாரணையில் பெறப்பட்ட முதல்கட்ட தகவல்கள் மட்டுமே தற்போதைக்கு வெளியாகி உள்ளன.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications