மூட வேண்டிய இந்திய ரயில்வேயை.. ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்திய லாலு பிரசாத்! சூரரை போற்றிய கதை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் ஒரு காலத்தில் மிக மோசமான நிலையில் இருந்த ரயில்வே துறையை லாலு பிரசாத் யாதவ் எப்படி முன்னேற்றினார் என்ற வரலாறு ஒடிசா ரயில் விபத்திற்கு இடையில் வைரலாகி வருகிறது.

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 300 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே இருந்த சரக்கு ரயிலுடன் கோரமண்டல் ரயில் மோதியதில் அடுத்த சில நிமிடங்களில் பெங்களூர் ரயிலும் மோத பயங்கர விபத்து ஏற்பட்டது.

How did Lalu Prasad Yadav single handedly give birth to the Indian Railways 2.0? : Inspiring Story

காரணம்? : இந்த ரயில்வே விபத்திற்கு மனித தவறுதான் காரணம். தவறாக சிக்னல் கொடுக்கப்பட்டது, சிக்னல் கொடுக்கப்பட்ட பின் அதை மாற்றியது, சிக்னல் முறையாக வேலை செய்யாதது, அடுத்த வந்த ரயிலுக்கு தகவல் தெரிவிக்காதது ஆகியவையும் இந்த தவறுக்கு காரணமாக கூறப்படுகிறது.

அதோடு இல்லாமல் ரயில்வே துறையில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, ரயில்வேயில் குறிப்பிட்ட மாநிலத்தினர் அதிக அளவில் பணிக்கு சேர்க்கப்படுவது, ரயில்வே பட்ஜெட்டை நீக்கியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த விபத்திற்கு மறைமுக காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் இந்தியாவில் ஒரு காலத்தில் மிக மோசமான நிலையில் இருந்த ரயில்வே துறையை லாலு பிரசாத் யாதவ் எப்படி முன்னேற்றினார் என்று சண்முகம் சின்னராஜ் என்ற நபர் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கி உள்ளார். நஷ்டத்தில் இருந்த ரயில்வே துறையை 2004-2009 ஆண்டுகளில் எப்படி லாலு பிரசாத் யாதவ் மீட்டு எடுத்தார் என்று அவர் விளக்கி உள்ளார்.

அவர் செய்துள்ள போஸ்டில் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்து முடிவில் இனி ரயில்வேயை தனியார் மயமாக்கிவிடுதல் நல்லது நஷ்டத்தில் இருந்து மீளவே முடியாது என்று அறிக்கை அளித்தது.

இந்தச்சூழ்நிலையில் தான் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்கிறார். லல்லு ஒன்றும் பொருளாதார மேதை அல்ல ரயில்வே துறை என்பது மிகப்பெரிய பொறுப்பு. தற்போதைய நிலவரப்படி 1.23 மில்லியன் தொழிலாளர்கள் வேலைப்பார்க்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனம். அப்படிப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்கிறார். அன்றைய காலகட்டத்தில ரயில்வேக்கென்று தனியாகவே பட்ஜெட் இருந்தது.

யாரும் ஏற்க முன்வராத பதவியை ஏற்றுக்கொண்டது மட்டுமில்லாமல் அதை வெற்றிகரமாக செய்தும் காட்டினார். 2004 ஜுலை 6 -ம் நாள் லல்லு தன் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நாடே திரும்பிப்பார்த்தது. காரணம், பொதுவாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விலையேற்றம் தான் இருக்கும்.

ஆனால், லல்லு தன் பட்ஜெட்டில் விலை குறைப்பு செய்தார். சாதாரண வகுப்பில் இருந்து முதல் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு வரை அனைத்துக்கும் பயணக்கட்டண குறைப்பு செய்தார். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் துறை, இவர் வேறு பயணக்கட்டண குறைப்பு செய்கிறார் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை

லல்லு தன் வித்தியாசமான செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். .மக்கள் அனைவரும் ரயில்களை பயன்படுத்த போதிய இருக்கைகள் இல்லை. புதியதாக ரயில்கள் வாங்கலாம் என்ற யோசனையை லல்லு ஏற்கவில்லை. மாறாக, தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் ரயில் என்ஜின்களின் இழுவிசையை சற்று அதிகரிக்கச் சொன்னார்.

How did Lalu Prasad Yadav single handedly give birth to the Indian Railways 2.0? : Inspiring Story

இதன் மூலம் ரயில்களில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை 15 ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது. ரயில்வேக்கு வருவாயும் அதிகரித்தது. அடுத்ததாக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கச் சொன்னார். சாதாரணமாக 45 KMPH என்ற அளவில் இருந்த ரயில்களின் வேகம் 55 KMPH என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. கூடவே, சூப்பர் பாஸ்ட் ரயில்கள் என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயண நேரம் மிச்சமாகியதுடன், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது.

அடுத்ததாக சரக்கு ரயில்களிலும் தன் கவனத்தை செலுத்தினார் லல்லு. வெகு நாட்களாக உயர்த்தப்படாமலிருந்த சரக்கு ரயில்களின் கட்டணத்தை உயர்த்தினார். மேலும் சரக்கு ரயில்களின் சுமக்கும் அளவை அதிகரிக்க திட்டமிட்டார். ஆனால் உயர் அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இப்படிச்செய்தால் ரயில்களில் ஆக்ஸில்கள் உடைந்து மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படும் என்றனர். லல்லு நேரடியாக ஆய்வுகளில் இறங்கினார். அதிகாரிகள் மட்டுமல்லாது பொறியாளர்கள், இன்ஜின் இயக்குபவர்கள், ரயில்வே தொழிலாளர்கள் என்று அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. முடிவாக 20.3 டன் என்ற அளவில் இருந்து 22.9 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. இதனால் ரயில்வேவிற்கு 3000 கோடி லாபம் கிடைத்தது. நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த துறையை லாபகரமான துறையாக மாற்றினார் லல்லு. பதவியேற்கும் போது கையிருப்பு 149 கோடி.

ஆனால் பதவியேற்றப்பின் கையிருப்பு 12000 கோடி. அன்று, லல்லு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ரயில்வே துறை என்றைக்கோ தனியார் வசமாயிருக்கும்.தன் மீது வைக்கப்பட்ட எல்லா எதிர்மறையான எண்ணங்களையும் அடித்து தூள் தூளாக்கினார். உலகின் மிகச்சிறந்த பிசினஸ் பல்கலைகழகமான ஹாவர்டு பல்கலைகழகத்தில் "லல்லு வின் ரயில்வே பணிகள்" இன்றும் விவாதபொருளாக அவர்கள் பாடத்திட்டத்தில் உள்ளது.

யார் ஒருவரை ஊழல்வாதியாக, கோமாளியாக ஊடகங்கள் சித்தரிக்கிறதோ, அவர் உண்மையில் மக்களுக்காக சிந்திக்கும், உழைக்கும் சமூகநீதி சிந்தனையாளராக இருப்பார் என்பதற்கு லல்லு பிரசாத் யாதவ் ஒரு எடுத்துக்காட்டு, என்று அவர் தனது போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+