"ரூல் 17".. ஆளுநர் ரவி உரைக்கு எதிராக துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தது எப்படி? செம பிளானிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி இன்று சட்டசபையில் நிகழ்த்திய உரையை நீக்கும்படி அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்ததற்கு பின்பாக முக்கிய சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநர் ஆர். என் ரவி இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி பாதியை மட்டுமே வாசித்தார்.

ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே பேச வேண்டும் என்பதுதான் சட்டம். இதுதான் சட்டசபை விதி. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார்.

How did Minister Duraimurugan bring resolution against governor RN Ravi

ஆளுநர் ரவி பேச்சு: எதிர்பார்த்தபடியே இன்று தமிழ்நாடு சட்டசபை பரபரப்புடன் கூடியது. ஆளுநர் ரவி உரையில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு நிலவி வந்தது. அதன்படியே இந்த மாதம் நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.

என்ன சொன்னார்?: சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.

அதாவது சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.

நீக்கம்; இதையடுத்து ஆளுநர் ரவியின் உரையை நீக்கி அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். ஆளுநர் பேசியதை நீக்கி அரசு தயார் செய்த உரையை சட்ட அவை குறிப்பில் பதிவேற்ற வேண்டும் என்று துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்து.. அது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அரசு தயார் செய்த உரை அவை குறிப்பில் ஏற்றப்பட்டது.

விதி என்ன சொல்கிறது; முக்கியமாக சட்டசபை விதி எண் 17 ஐ இதில் தளர்த்தி உள்ளனர். தமிழ்நாடு சட்டசபை விதி எண் 17 என்ன சொல்கிறது என்றால் ஆளுநர் உரை நிகழ்த்தும் முன்பும், பின்பும், உரை நிகழ்த்தும் போதும் அவரின் செயலுக்கு இடையூறு இருக்க கூடாது. அவருக்கு இடையூறாக செயல்பட கூடாது. அவர் அந்த அரங்கத்தை விட்டு வெளியேறும் வரை அவரின் செயலுக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்று விதி சொல்கிறது. இந்த விதி சபாநாயகருக்கும் பொருந்தும், முதல்வருக்கும் பொருந்தும்.

அதாவது ஆளுநர் உரையாற்றும் அன்று முன்பும், பின்பும், அவரின் உரையின் போது அவருக்கு இடையூறு செய்ய கூடாது என்பதே இந்த விதி. அமைச்சர் துரைமுருகன் இன்று ஆளுநர் உரையை நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இந்த விதியை மீறித்தான் அவர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அங்குதான் துரைமுருகன் - சபாநாயகர் அப்பாவு மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட்டனர் என்று கூற வேண்டும்.

How did Minister Duraimurugan bring resolution against governor RN Ravi

ஏனென்றால், துரைமுருகன் தனது தீர்மானத்தை படிக்கும் போதே சட்டசபை விதி எண் 17 ஐ தளர்த்தி என்றுதான் தனது தீர்மானத்தை வாசிக்கிறார். சட்டசபை விதி எண் 17ஐ தளர்த்தி தீர்மானம் கொண்டு வருவதாக கூறினார்.

துரைமுருகன்; இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இப்படிப்பட்ட தீர்மானங்களை அவை முன்னவர்தான் பொதுவாக கொண்டு வருவார். அதாவது அமைச்சர் துரைமுருகன்தான் இது போன்ற தீர்மானங்களை அவை முன்னவராக கொண்டு வந்து இருக்கிறார்

கடந்த வருடம் இதே விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த முறை ஆளுநர் ரவிக்கு எதிராக அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+