50 பஸ்ஸில் இறக்கப்பட்ட ஆட்கள்! ரத்தக்கறை படிந்த வண்டி! அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியது எப்படி?
சென்னை: அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றி உள்ளார். அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடக்க உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றி உள்ளார். இதற்காக அவர் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு திட்டங்களை வகுத்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடக்க உள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 9 மணிக்கு இந்த தீர்ப்பு வழங்கப்படும்.

என்ன நடந்தது?
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். அவர் வரும் வழியில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு இருந்தனர். ஓ பன்னீர்செல்வம் இதற்காக தேனியில் இருந்து ஆட்களை இறக்கியதாக கூறப்படுகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரண்டு நாட்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தேனியில் இருந்து சென்னை நோக்கி வந்துள்ளனர்.

50 பேருந்து
மொத்தம் 50 பேருந்துகளில் இதற்காக ஆட்கள் இறக்கப்பட்டு இருந்தனர். மொத்தம் 1000 பேர் இதற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். ஓபிஎஸ்ஸுக்கு கடந்த பொதுக்குழுவில் ஆதரவு இல்லை. தொண்டர்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிக்க போதுமான அளவில் இல்லை. இதனால் இந்த முறை சுதாரித்துக்கொண்டு அதிக அளவில் நிர்வாகிகளை அவர் சென்னைக்கு வரவழைத்து பவரை காட்டி உள்ளார்.

ஆலோசனை
நேற்று மாலை சென்னைக்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று இரவே ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆலோசனை செய்தனர். நேற்று இரவே ஓபிஎஸ் அலுவலகத்தில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவது பற்றி நேற்றே ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்தை கட்டுக்குள் கொண்டு வருவோம் என்ற முடிவு நேற்றே ஓபிஎஸ் அலுவலகத்தில் எடுக்கப்பட்டது.

எடப்பாடி எதிர்பார்ப்பு
இதை எடப்பாடி தரப்பும் எதிர்பார்த்தே இருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அலுவலகத்தில் ஆட்களை குவித்தது. அதோடு அதிமுக அலுவலகம் போட்டப்பட்டது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் தனது அலுவலகத்தில் இருந்து அதிமுக அலுவலகத்திற்கு சென்றார். அவர் செல்லும் வழியிலேயே எடப்பாடி - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது.

என்ன ஆனது
இதில் அந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஓபிஎஸ் வேனில் சாய, அந்த ரத்தக்கறை ஓபிஎஸ் வேனில் அப்படியே படிந்தது. இதனால் சில நிமிடம் ஓபிஎஸ் பயணம் தடை பட்டது. அதன்பின் தொடர்ந்து ஓபிஎஸ் வேனில் அதிமுக அலுவலகம் நோக்கி சென்றார்.இன்னொரு பக்கம் அதிமுக அலுவலக வாசலில் எடப்பாடி - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி மோதிக்கொண்டனர். அங்கு இதனால் கலவர பூமியான சூழ்நிலை காணப்பட்டது.

எப்படி பிடித்தார்
இதன் பின் 15 நிமிட பயணத்தில் ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் வந்தார். அங்கு பூட்டப்பட்டு இருந்த கதவுகளை ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் உடைத்தனர். பூட்டுகளை உடைத்த நிலையில் ஓபிஎஸ் அலுவலகத்திற்கு உள்ளே சென்றார். உள்ளே சென்ற ஓபிஎஸ் அலுவலகம் மேலே ஏறி ஜெயலலிதா போல கையை அசைத்தார். ஆனால் அவர் தொண்டர்களிடம் பேசவில்லை.












Click it and Unblock the Notifications