Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

HBD Rahul..'சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன்'.. தமிழக மக்கள் மனங்களை ராகுல் காந்தி வென்றது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தோற்ற போதும், தமிழ்நாட்டில் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட தோற்கவில்லை.. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்க ராகுல் காந்தி முக்கிய காரணம் ஆவார். தமிழக மக்கள் மனங்களை ராகுல் காந்தி வென்றது எப்படி என்பதை பார்ப்போம்.

ரேபரலி தொகுதி எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்திக்கு 54 வயது ஆகிறது..ராகுல் காந்திக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ராகுல் காந்தி யார் என்று தமிழகத்தில் யாரைகேட்டாலும் சொல்வார்கள்.. அந்த அளவிற்கு இங்கு தெரிந்த முகமாகவும், கட்சிக்கு அப்பாற்பட்டு பலருக்கு பிடித்த முகமாகவும் இருக்கிறார்.

Rahul Gandhi congress birth day

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டுபோட முக்கியமான காரணம்.. திமுக உடன் கூட்டணி என்பதற்கு அடுத்தபடியாக சொல்வது என்றால், ராகுல் காந்தி மீதான அன்பு தான் காரணமாகும். ராகுல் காந்திக்காகவே பலர் ஓட்டுபோட்டதால் தான் 40க்கு 40 தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது என்கிறார்கள் பல காங்கிரஸ் நிர்வாகிள். இந்தியா கூட்டணி இன்று பலமான எதிர்க்கட்சி கூட்டணியாக இருக்க தமிழ்நாட்டு மக்களின் வாக்குகள் முக்கிய காரணமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் எழுச்சியால் 2014ல் வீழ்ந்த காங்கிரஸ் கட்சி, 2019ல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. பல மாநிலங்களிலும் ஆட்சி இழந்து பரிதவித்த காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி புத்துயிர் ஊட்டினார். ராகுல் காந்தி நடத்திய கன்னியாகுமரி முதல் காஷ்மீர் யாத்திரை மற்றும் மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையிலான யாத்திரைக்கு பின்னர் காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சி பெற்றுள்ளது. இன்று சுமார் 100 எம்பிக்கள் என்ற நிலையை எட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. கர்நாடாகவிலும், தெலுங்கானாவிலும் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்ற ராகுல் காந்தியின் யாத்திரை மற்றும் பிரச்சாரம் முக்கிய காரணமாகும்.

Rahul Gandhi congress birth day

தமிழ்நாட்டை பொறுத்தரை கட்சிக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களுக்கு ராகுல் காந்தியை பிடிக்க காரணம்.. எந்த பந்தாவும் இன்றி எளிமையாக பழகுவது, தமிழ்நாட்டு பிரச்சனைகளை பற்றி நன்கு புரிந்து பேசுவது, தமிழ்நாடு மக்கள் எப்படி ஒருபிரச்சனையை கையாள்வார்கள் என்பதை அறிந்து பேசுவது இப்படி அடுத்தடுத்து சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தி வரும்போது எல்லாம் மக்களுடன் நெருங்கி பழகுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சென்னை வந்த போது ராகுல் காந்தி ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவிகளுடன் . இந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தி மாணவிகள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் மிகத் தெளிவாகவும், சிறப்பாகவும் பதில் அளித்தார்.

அப்போது ராகுல் காந்தி கூறும் போது, "நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. குறிப்பாக, இந்த மேடையில் இருந்து நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். நீங்கள் அமர்ந்துள்ள இடத்தில் இருந்து பதில் சொல்ல வேண்டும். அப்படியான நடைமுறைதான் எனக்குப் பிடித்துள்ளது. உங்களுக்கும் எனக்கும் உள்ள இந்த ஏற்றத் தாழ்வுகளை நான் விரும்ப வில்லை" என்றார். அப்போது மாணவி ஒருவர் பேசும் போது. 'ஹாய் சார்...' என்று சொல்லி கேள்வியை ஆரம்பித்தார் . அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி 'என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்க' என்றார். உடனே அந்த மாணவியும், 'ஹாய் ராகுல்' என்றார். அதற்கு அங்கிருந்த மொத்த மாணவிகளும் உற்சாக கரகோஷம் ஏழுப்பி அதிரவைத்தார்கள்.

Rahul Gandhi congress birth day

அடுத்ததாக சொல்வது என்றால், கோவை ஸ்வீட் கடை சம்பவம்.. கோவை செட்டிபாளையம் பகுதியில் இண்டியா கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்விற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த ராகுல் காந்தி சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றவர், திடீரென சிங்காநல்லூர் பகுதியில் வாகனத்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி டிவைடரை தாண்டி அங்கிருந்த இனிப்பு கடைக்கு சென்று இனிப்புகளை வாங்கி பணியாளர்களுடன் உரையாடி புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

ஸ்வீட் கடைக்கு எந்த பந்தாவும் இன்றி, சராசரி பொதுமக்களை போல் டிவைடரை தாண்டி ராகுல் காந்தி ஸ்வீட்டை வாங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த ஸ்வீட்டை முதல்வர் ஸ்டாலினுக்காக வாங்கி செல்வதாக அப்போது கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த செயலும் பலருக்கும் திகைப்பை தந்தது. இந்தியாவில் பல்லாயிரம் மக்களால் நேசிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக உள்ள ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ்நாட்டின் அளவுக்கடந்த பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ஒருமுறை திருப்பூரில் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசும் போது, "வரலாற்றையும், கடந்தகால நிகழ்வுகளையும் தெரிந்தவர்களுக்கு தமிழக மக்களை ஏமாற்றி விட முடியாது என்பது புரியும். தமிழக மக்களின் நல்லெண்ணத்தோடு தான் நல்ல காரியத்தை செய்ய முடியும். என்னை பற்றி உங்களுக்கு தெரியும். எனது பாட்டி இந்திரா காந்திக்கும், எனது தந்தை ராஜீவ் காந்திக்கும் நீங்கள் காட்டிய மரியாதை எனக்கு தெரியும். நான் உங்களில் ஒருவன். நான் உங்கள் குடும்பத்தில் ஒரு பையன்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தில் இருக்கிறவர்கள் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மொழிக்கு இருக்கும் பெருமையும், பண்பாட்டின் சிறப்பையும் அவர்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர, நானும் ஒரு தமிழன் தான். நான் உங்கள் வீட்டு பிள்ளை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று பேசினார். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட அன்பு காட்டியதால் தான் ராகுல் காந்தி தமிழக மக்கள் மனங்களை வென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் பார்க்கிறார்கள்.

Rahul Gandhi congress birth day

ஒரு முறை உள்துறை அமித்ஷா, காங்கிரஸ் கட்சியை உத்தரப்பிரதேசத்தில் வெல்லவில்லை என்று கிண்டல் செய்து நாடாளுமன்றத்தில் பேசிய போது, ராகுல் காந்தி பதிலடி கொடுக்க கூறிய மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு. அப்போது ராகுல் காந்தி கூறுகையில், உங்களால் ஒருநாளும், ஒருபோதும் தமிழ்நாட்டில் வெற்றி பெறவே முடியாது என்று கூறி அதிர வைத்தார். இன்றும் பாஜகவை விமர்சிக்க ராகுல் காந்தி பயன்படுத்தும் ஒரே வார்த்தை தமிழ்நாடு தான் என்பது குறிப்பித்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+