ஒன் மேன் ஆர்மி.. சேலம் ராஜேந்திரன் சுற்றுலா அமைச்சரானது எப்படி? தலைமை காதுக்குப் போன அந்தக் குரல்!
சென்னை: சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ஆர்.ராஜேந்திரன் புதிய அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார். அவருக்கு சுற்றுலாத்துறை, சர்க்கரை கரும்பு தீர்வை மற்றும் கரும்புப்பயிர் மேம்பாட்டுத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் ராஜேந்திரன், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றதற்குப் பின்னணியில் முக்கியமான குரல் ஒன்று இருக்கிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. புதிய அமைச்சர்களாக சேலம் ஆர்.ராஜேந்திரன், ஆவடி சா.மு.நாசர், கோவி.செழியன், செந்தில் பாலாஜி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை பதவியும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், அமைச்சர் ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், அமைச்சர் சா.மு.நாசருக்கு சிறுபான்மை நலத்துறை இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தின் ஒன் & ஒன்லி திமுக எம்.எல்.ஏ: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மட்டுமே திமுக எம்.எல்.ஏவாக சேலம் மாவட்டத்தில் உள்ளார். எனவே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என திமுகவினர் பெரிதும் எதிர்பார்த்தனர்.
மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு அமைச்சர் பதவி கட்டாயம் வழங்கப்படும் என திமுக ஆட்சி அமைந்தபோதே கூறப்பட்டது. ஆனால் அப்போது அமைச்சர் பதவி ராஜேந்திரனுக்கு வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் சேலம் மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது தான். அதன் பிறகு சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டார்.
சேலம் மாவட்ட திமுகவினரின் குரல்: உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வகணபதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு பெரிதும் காரணமாக இருந்த ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
சேலம் மத்திய மாவட்ட செயலாளராக உள்ள எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என சேலம் மாவட்ட திமுகவினர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கிர். அண்மையில் ஓமலூர் அருகே நடந்த கூட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர் பேசுகையில் சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தாயிடம் குடித்தால் தான் வயிறு நிரம்பும்: மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக உள்ள அமைச்சர் கே.என்.நேரு, பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். அப்போது நம்மால் அவரிடம் பேச முடியவில்லை. அமைச்சர் இல்லை என்றால் சேலத்தில் வெற்றி பெற முடியாது. தாயிடம் தாய்ப்பால் குடித்தால் தான் வயிறு நிரம்பும். அடுத்த தாயிடம் குடித்தால் நிரம்புமா? என அவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் திமுகவினரின் குரல் தலைமையின் காதுக்கும் சென்ற நிலையில், அமைச்சரவை மாற்றத்தில் ராஜேந்திரனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு: கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக அமைச்சரவையில் வீரபாண்டி ஆறுமுகம், வேளாண்மைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன் பிறகு திமுக அமைச்சரவையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமைச்சரவையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இடம்பெற்றுள்ளார். இதனால் சேலம் மாவட்ட திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
யார் இந்த அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்?: பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் கடந்த 1980 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாணவர் அணி உறுப்பினராக சேர்ந்தார். இவர் சென்னை குருநானக் கல்லூரியில் பி.ஏ பி.எல். பயின்றுள்ளார். 1985 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்தார். பின்னர், 1992 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார்.
இதைத்தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மற்றும் 2001 ஆம் ஆண்டு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பொறுப்பை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு போக்குவரத்து தொ.மு.சவில் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை பல்வேறு வகித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகிறார்.
முக்கிய பொறுப்புகள்: 1998 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவர், பெரியார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்தார். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பனமரத்துப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு மீண்டும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications