கரூர் சொகுசு பங்களா குறித்து கேட்ட அமலாக்கத் துறை.. செந்தில் பாலாஜி பரபர வாக்குமூலம்.. சிக்கிய தம்பி
சென்னை: கரூர் சொகுசு பங்களா குறித்து அமலாக்கத் துறை கேள்வி எழுப்பிய நிலையில் செந்தில் பாலாஜி அளித்த ஒரு வார்த்தையால் அவருடைய தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் அமலாக்கத் துறை கஸ்டடியில் இருந்த போது நடத்தப்பட்ட விசாரணையில் 3000 க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் 120 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

நேற்று முன் தினத்துடன் செந்தில் பாலாஜியின் அமலாக்கத் துறை காவல் முடிவடைந்த நிலையில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணையில் துன்புறுத்தல்கள் ஏதேனும் கொடுத்தார்களா என நீதிபதி கேட்ட போது அவர் இல்லை என்றார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் கட்டி வந்த சொகுசு பங்களாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர். இந்த வீடு கரூர்- சேலம் புறவழிச் சாலையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ 30 கோடியாம். ஆனால் இதை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக அமலாக்கத் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நேற்று மாலை சென்னை அழைத்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.
மேலும் 4 முறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகாத நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல நேரிடும் என்பதால் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதன்படி கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.
அவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பல கேள்விகளுக்கு அவர் தெரியாது, அப்படியா எனக்கு ஞாபகம் இல்லையே என தெரிவித்துள்ளார். அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதால் அமலாக்கத் துறையினர் அவர்களுடைய பாணியிலான விசாரணையை கையில் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கரூரில் வாங்கப்பட்ட நிலம் ரூ.30 கோடி. அதை ரூ.10 லட்சத்தில் அசோக்குமாரின் மாமியார் வாங்கியுள்ளார் என்றால் அதற்கு உங்கள் செல்வாக்கு பயன்படுத்தப்படாமல் இருந்திருக்காதே என அதிகாரிகள் கேட்டனர். அதற்கு செந்தில் பாலாஜி எல்லாமே அசோக்குமாருக்குத்தான் தெரியும். எனக்கு தெரியாது என்றார். செந்தில் பாலாஜியின் வாயிலாகவே அசோக்குமாரின் பெயர் வந்துவிட்டதால் அவரை தேடி கொண்டிருந்த நிலையில் போலீஸார் கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications